சுஜித் மரணம் மனதை உலுக்குகிறது... டிடிவி தினகரன் இரங்கல்
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டது தனது மனதை உலுக்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சுஜித்தை இழந்துவாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை என்றும், சுஜித்தின் மரணம் தன்னை உலுக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என தாம் உட்பட அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இப்படியொரு துயர நிகழ்வு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணறுகளில் நிகழும் உயிரிழப்பில் இந்த சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும் என்றும், இந்த உயிரிழப்பு சம்பவம் கற்றுத்தந்த பாடத்தை கடைபிடித்து பயன்பாடு அற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். சுஜித் தனது மரணத்தின் மூலம் அனைவருக்கும் பாடம் கற்றுத்தந்துவிட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், கடந்த நான்கு நாட்களாக தமக்கு நெஞ்சம் பதைபதைத்தாகவும், குழந்தை சுஜித் எப்படியாவது நலமுடன் மீட்கப்பட்டுவிடுவான் என தாம் பிரார்த்தனை செய்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் டிடிவி தினகரன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications