"விடாதீங்க அவரை".. கச்சிதமாக பிளானை போடும் பாஜக.. அதுக்குள்ள "தலைவருக்கு" என்னாச்சு.. ஒரே குறி திமுக
அமமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராகி கொண்டிருக்கிறதா தெரியவில்லை
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்து ஒன்று, தமிழக அரசியலில் மீண்டும் குழப்பத்தையும், பரபரப்பையும் கிளப்பி வருகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. கட்சியை பலப்படுத்தும் வேலையிலும் பாஜக மும்முரமாகி விட்டது.. அதிலும், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, என நாலாபக்கமும் உள்ள கட்சிகளில் அதிருப்திகள் யார் என்பதை பார்த்து கொக்கி போட்டு தூக்கும் வேலையில் இறங்கிவிட்டதாகவே தெரிகிறது.
பாஜகவுக்கு யார் சென்றாலும், முக்கிய பதவி தரப்படும் என்பதால், பலரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருவது இயல்புதான்.. ஆனாலும், உடனடியாக முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதால், இந்த கட்சிகளின் அதிருப்தியாளர்கள் பொறுமை காத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

டிடிவி தினகரன்
வரப்போகும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமையாவிட்டாலும், தனித்து களம்காணும் வகையில், அமைய உள்ள கூட்டணியை பலப்படுத்தும் பணிகளிலும் கவனம் செலுத்தவும் முயன்றுள்ளது.. கடந்த எம்பி தேர்தலின்போதே இப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டது.. அதில், முதலில் சிக்கியவர் அமமுகவின் டிடிவி தினகரன்தான் என்றார்கள்.. காரணம், தினகரனை பொறுத்தவரை, மிக தேர்ந்த அரசியல்வாதி.. நுணுக்கம் தெரிந்தவர்.. ஒருகுறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை தக்கவைத்தபடி வருவது டெல்லி கவனத்தை எப்போதோ ஈர்த்துவிட்டது.

சசிகலா
சசிகலா விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாஜக, பெரிதாக வாய் திறக்கவில்லை.. ஆதரவு தரவில்லை. கிட்டத்தட்ட தினகரனும் இதுபோலவே அணுகுமுறையை கடைப்பிடிப்பதால், இந்த விஷயத்தையும் பாஜக சாதகமாகவே பார்க்கிறது.. தினகரனை பொறுத்தவரை எப்போது தேர்தலில் நின்றாலும், அமமுக பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்கள்தான்.. இதுவும் பாஜகவுக்கு குஷியை தந்த செய்திதான்.. அதனால்தான் வரப்போகும் தேர்தலிலும் தினகரனை குறி வைத்துள்ளதாகவும், அப்படி அமமுகவை கூட்டணியில் இழுத்து போட்டால், நிச்சயம் திமுகவின் ஓட்டுக்களை வெகுவாக பிரித்துவிடுவார் என்றும் பாஜக கணக்கு போடுகிறது.

பிரஷர்
அதுமட்டுமல்ல, டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், அதிமுகவுக்கு டென்ஷன் எகிறியே கிடக்கும், அவர்களுக்குள் அதிகாரப்பிரச்சனை தலைதூக்கி உட்கட்சி பூசல் பெருகும் என்றும் கணக்கு போடுகிறது.. இதுவும் பாஜகவுக்கு சாதகமான விஷயமே.. எல்லாவற்றிற்கும் மேலாக, தினகரன் பாஜகவை விமர்சிக்காமல், தாமரை இலையில் நீர்போல உறவை வைத்துள்ளதால், இதையும் தனக்கு பிளஸ் ஆக பார்க்கிறது பாஜக.

தாமரை கட்சி
ஆனால், கடந்த வாரம் தினகரன் ஒரு பேட்டி தந்தார்.. அதில், அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.. அதிமுகவை கைபற்றுவது தான் தன்னுடைய ஒரே நோக்கம், அதற்காகவே அமமுகவை ஆரம்பித்தேன் என்று இத்தனை காலமும் தினகரன் சொல்லி வந்த நிலையில், திடீரென அமமுக -அதிமுக இணைய வாய்ப்பில்லை என்று டிடிவி தினகரன் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது..

திருந்தவேயில்லை
அப்படியானால் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தயாராகிறாரா? அல்லது அதிமுகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? என்பன போன்ற குழப்பங்கள் எழுந்தன.. ஆனால், நேற்றைய தினம் ஒரு பேட்டி தந்துள்ளர்.. அதில், திமுக திருந்தியிருக்கும் என்று நினைத்துதான் மக்கள் ஓட்டு போட்டார்கள்.. ஆனால், திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது.. ஸ்டாலின் பொய் பொய்யா பேசிட்டு வருகிறார்.. அதிமுகவை மீட்டெடுப்பதே எங்கள் லட்சியம் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்..

குறியே திமுகதான்
ஒரே வாரத்தில் தினகரனுக்கு என்ன ஆனது? கட்சியை மீட்டெடுப்பதே எங்கள் லட்சியம் என்பதை சசிகலா மட்டுமே சொல்லி வந்த நிலையில், தினகரனும் பேசியுள்ளது, குழப்பத்தை அதிகரித்துள்ளது.. அப்படியானால், சசிகலாவுடன் தினகரன் சேர போகிறாரா? என்று தெரியவில்லை.. எப்படிப்பார்த்தாலும், திமுகதான் நமக்கு எதிரி என்று அடிக்கடி தினகரன் சொல்லி வரும் நிலையில், இப்போதும் அதுபோலவே குறி வைத்து பேசி வருகிறார்.. ஆனால், அதிமுக - பாஜக - சசிகலா இந்த 3 விஷயங்களில்தான் குழப்பமாக இருக்கிறது.. விரைவில் இற்கெல்லாம் ஒரு தெளிவு கிடைக்கிறதா என்று பார்ப்போம்..!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications