"விடமாட்டேன்".. திமுகவுக்கு குறி வைத்து.. வேட்டியை மடித்து கட்டிய கூல் தலைவர்.. அதிமுகவுக்கும் செக்?
திமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் செக் வைத்துள்ளார் டிடிவி தினகரன்
சென்னை: கூல் தலைவர் களமிறங்க போகிறாராம்.. உள்ளாட்சி தேரத்லுக்கு தயாராகிறாராம்.. அதுவும் திமுகவை மட்டுமல்ல, அதிமுகவுக்கும் சேர்த்தே குறி வைத்துள்ளாராம் அமமுகவின் டிடிவி தினகரன்
தேர்தல் நடந்து முடிந்ததில் இருந்தே தினகரனை காணவில்லை.. அதிர்ச்சி தோல்வி என்பார்களே அது தினகரனுக்குத்தான்..!
கடந்த தேர்தலில் 3வது இடத்தை பிடித்த டிடிவி, இந்த முறை தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டார்.. சீமான் 3வது இடத்துக்கு உயர்ந்துவிட்டார்.. அதாவது, தினகரனின் 5 சதவீத வாக்கு வங்கியும், இரண்டரை சதவீதமாக பாதியாக தற்போது குறைந்துவிட்டது.

சசிகலா
இதனால், அமமுகவில் இருந்து முக்கியமான நபர்கள் திமுக பக்கம் தாவிக் கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக, பழனியப்பன், ஜெயந்தி பத்மநாபன் போன்ற சீனியர்களே, வெறுத்துபோய் திமுக பக்கம் போய்விட்டார்கள்.. இதனால் அமமுக கூடாரமே ஆடிப்போய் உள்ளது.. அதிலும் பழனியப்பன் சென்றது, சசிகலாவுக்கே கோபத்தை ஏற்படுத்தியது.

போன்
"எல்லாரையும் திமுக பக்கம் அனுப்பறதுக்குதான் நீ கட்சி நடத்துறியா" என்று தினகரனுக்கு போனை போட்டு சத்தம் போட்டுள்ளதாககூட தகவல்கள் கசிந்தன.. அதனால், முதல் வேலையாக, தினகரன் இந்த நிலையை மாற்றவேண்டும், வீட்டில் முடங்கியிருக்காமல் தொண்டர்களை சந்தித்து அடிக்கடி பேச வேண்டும்... இல்லாவிட்டால் அமமுக என்ற கட்சியே நாளடைவில் காணாமல் போய்விடும் என்ற முணுமுணுப்புகளும் கட்சிக்குள் எழ ஆரம்பித்துவிட்டன.

தலைவர்கள்
எல்லா பக்கத்தில் இருந்தும் இப்படி எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, அதிரடியாக கிளம்பி வரப்போகிறார் தினகரன்.. அதன் முதல் வேலையாக, தொண்டர்களுக்கு ஒரு லெட்டர் எழுதியுள்ளார்.. அதில், "9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு தயாராவோம்.. அரசியலை பொறுத்தவரை, வெற்றி, தோல்வி என்பது எல்லா இயக்கங்களுக்கும், தலைவர்களுக்கும் பொதுவானது தான்... இந்த பின்னடைவு தற்காலிகமானது... புத்தம் புது பொலிவோடும், வலிவோடும், முன்பை விட வேகத்தோடு செயல்பட போகிறோம். சிறப்பான எதிர்காலம், நமக்காக காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

திமுக
இந்த லெட்டரை பார்த்ததும் அமமுகவினர் ஏக குஷியில் உள்ளனர்.. அதுமட்டுமல்ல, தினகரன் 2 விஷயத்தில் இந்த முறை கவனம் செலுத்த போவதாக தெரிகிறது.. வழக்கம்போல இந்த தேர்தலிலும் திமுகவை குறி வைக்கிறார்.. சென்ற முறையும் திமுகதான் நமக்கு பொது எதிரி என்று சொல்லியே பிரச்சாரம் செய்தார்.. இந்த முறையும் திமுகவுக்கு செக் என்ற பாணியை கையில் எடுத்துள்ளார். காரணம், இப்போது எழுதியுள்ள அந்த லெட்டரில், ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டே மாதங்களில், பல விஷயங்களில் தடுமாறி வருவதை மக்கள் பார்க்கின்றனர் என்று ஒரு பஞ்ச் வைத்துள்ளார்.

அதிமுக
மற்றொன்று, தாய்க்கழகமான அதிமுகவுக்கே குறி வைக்கிறார்.. அதாவது நடக்க போகும் தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்று விட்டு, அதைவைத்து அதிமுகவைக் கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.. அதற்கான முஸ்தீபுகள்தான் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள் என்றும் சொல்லப்படுகிறது.. நடக்க போகும் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமுமுகவை மட்டுமல்லாமல் அதிமுகவில் உள்ள தனது அனுதாபிகளையும் சேர்த்து கொள்ளவும் முடிவில் உள்ளார்.. அதற்கான திட்டங்களையும் வகுத்து வருகிறாராம்.

சிக்கல்
ஆனாலும் ஒரு சிக்கல் உள்ளது.. இந்த முறையும் அநேகமாக அதிமுகவும், பாஜகவும் இணைந்தே தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது... அப்படி இருக்கும்போது, பாஜகவின் ஆதரவை தினகரன் பெறுவாரா என்று தெரியவில்லை.. சென்ற முறை தேர்தலின்போது, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்றார்.. இதைநம்பிதான் ஒவைசி போன்ற இஸ்லாமிய கட்சிகள் நம்பி கூட்டணி வைத்தன..

சலசலப்பு
ஆனால், "நாங்க ஒன்றும் எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லவில்லையே" என்று ஒரே போடாக போட்டு சிறுபான்மையினருக்கே ஜெர்க் தந்தார்.. ஆனால், இதையும் பாஜக அப்போது கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விஷயம்..

பாஜக
அந்த வகையில், இப்போதாவது பாஜகவுடன் டிடிவி இணைவாரா? அல்லது அதிமுகவுடன் பாஜக இணைந்தால், அதை எப்படி அணுகுவார்? திமுகவுக்கு எந்த மாதிரியான செக் வைக்க போகிறார்? அதிமுகவை கைப்பற்றுவது சாத்தியமா? எல்லாவற்றிற்கும் மேலாக ஆடியோ ரிலீஸ் செய்து வரும் சசிகலாவை எப்போது அரசியலுக்குள் நிஜமாகவே அழைத்து கொண்டு வருவார்? போன்ற பல கேள்விகள் நம்மிடையே எழுகிறது.. இருந்தாலும், இவ்வளவு நாள் இல்லாமல், இப்போதாவது தினகரன் களத்தில் குதித்துள்ளது, அமமுகவுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தந்து வருகிறது..












Click it and Unblock the Notifications