ஃபனி தொடங்கி ஆம்பன் வரை.. நல்லதா? கெட்டதா? அடுத்தடுத்த வாய்ப்புகளை இழந்த சென்னை.. என்ன நடக்கும்?
சென்னை: ஆம்பன் புயல் காரணமாக தற்போது சென்னையில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.ஆம்பன் புயல் காரணமாக ஏற்பட்ட வெப்ப காற்று ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வர தொடங்கி உள்ளது.
Recommended Video
ஆம்பன் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. ஆம்பன் புயல் தற்போது மேற்கு வங்கத்தை நெருங்கிவிட்டது. இன்று இந்த புயல் கரையை கடக்கிறது.வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே ஆம்பன் புயல் கரையை கடக்கிறது.
இதனால் பெரிய அளவில் மேற்கு வங்கத்தில் சேதங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருந்து 80 கிமீ தூரத்தில்தான் வங்க கடலில் ஆம்பன் புயல் உள்ளது. இன்னும் 1 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும்.

சென்னை நிலை
இந்த புயல் சென்னையை தாக்கவில்லை. தமிழகம் பக்கமே இந்த புயல் வரவில்லை. இதனால் தமிழகத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் லேசான மழை பெய்தது. அதே போல் சென்னையிலும் லேசான மழை பெய்தது. ஆந்திராவில் இருந்து வந்த காற்று காரணமாக சென்னையில் லேசான மழை பெய்தது. ஆனால் தற்போது சென்னையில் இதனால் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

வெயில் எப்படி
ஆம்பன் புயல் காரணமாக ஏற்பட்ட வெப்ப காற்று ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வர தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. நேற்றே 41 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை சென்றது. இன்று அதை விட மோசமாக வெப்பநிலை கொளுத்துகிறது. இன்று 42 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை செல்லும் என்கிறார்கள்.

அதிக வெப்ப காற்று
இன்று மாலை சென்னையில் அனல் காற்று மோசமாக வீசும் என்று கூறப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் இந்த வெப்ப காற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் கத்திரி வெயில் காரணமாக கடுமையான வானிலை நிலவி வருகிறது. தற்போது இந்த ஆம்பன் புயல் விட்டு சென்ற வெப்ப காற்று காரணமாக இன்னும் அதிகமாக வெப்பநிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கொரோனாவிற்கு இடையே
ஒருவகையில் இந்த புயல் சென்னையில் இப்போது தாக்காமல் போனது ஒருவகையில் நல்லது என்று கூறலாம். ஏனென்றால் சென்னையில் ஏற்கனேவே கொரோனா காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. மக்கள் மொத்தமாக வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை கொரோனா புரட்டி போட்டுள்ளது. தற்போது இதனுடன் புயலும் சேர்ந்து கொண்டால் அது சென்னைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தண்ணீர் பஞ்சம்
அந்த வகையில் சென்னை முக்கியமான பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளது. ஆனால் சென்னை இதனால் மழையை இழந்துள்ளது. சென்னைக்கு இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படலாம். சென்னை இப்படி வரிசையாக மழைக்கான வாய்ப்பை இழந்து வருகிறது. ஏற்கனவே ஃபனி புயல் சென்னையை நோக்கி வந்தது. இதனால் சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபனியும் விலகி சென்றது.

ஏற்கனவே இப்படி நடந்தது
ஃபனி புயல் ஒடிசாவில் கரையை கடந்தது. அங்கு இதனால் நல்ல மழைபெய்தது. அப்போதும் இதனால் சென்னையில் வெப்ப காற்று வீசியது. வெப்ப காற்று காரணமாக சென்னையில் வெயில் அதிகரித்தது. தற்போது மீண்டும் அதேபோல் சென்னையில் இன்னொரு முறை புயல் ஏமாற்றி உள்ளது. இனி சென்னையில் எப்போது மழை பெய்யும், எப்போது ஏரிகள் நிரம்பும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications