ஆவினுக்கு எதிராக போட்டி போடல.. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கவே நினைக்கிறோம்.. அமுல் விளக்கம்!
சென்னை : தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், அமுல் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம், தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமுல் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது என்றும், அமுல் பால் கொள்முதல் செய்தால் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.
அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி விடும் சூழல் ஏற்படும் என்றும் கவலை தெரிவித்திருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அமுல் நிறுவன ஒப்பந்ததாரர்கள் விளக்கமளித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆவினுக்கு எதிராக வியாபாரம் செய்ய மாட்டோம். ஆவின் நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையையே நாங்களும் நிர்ணயித்து கொள்முதல் செய்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், "ஆவின் நிறுவனத்தைவிட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாகக் கூறும் தகவல் பொய்யானது. ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்குக் கொள்முதல் விலையாக என்ன நிர்ணயம் செய்திருக்கிறதோ, அதே விலைக்கு மட்டுமே அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும்.

தமிழ்நாட்டில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிவரும் நிலையில், 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமிருக்கும் பால் தனியார் நிறுவனங்கள் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் விழாக் காலங்களில் அதிக தொகைக்கும், மற்ற காலங்களில் குறைவான விலைக்கும் மட்டுமே கொள்முதல் செய்கின்றன.
இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத் தவிர்க்கும் விதத்தில் மட்டுமே அமுல் செயல்படும். ஆவின் நிறுவனத்துக்கு எதிராகச் செயல்படாது. ஏற்கெனவே ஆவின் நிறுவனத்துக்குப் பால் வழங்கிவரும் நபர்கள், அமுல் நிறுவனத்துக்குப் பால் வழங்க வேண்டுமென்றால் ஆவின் நிறுவனத்திலிருந்து NOC சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன.
எனவே, ஆவின் நிறுவனத்துக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. ஆவின் நிறுவனத்தில் பால் முகவர்களாக இருக்கும் யாரிடமும் அமுல் நிறுவனத்துக்குப் பால் வழங்க வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை" எனத் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications