Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தின் 3 பெரிய ஆளுமைகளின் இறுதி சடங்கில் பொறுப்பேற்றது எனது பாக்கியம்.. அமுதா ஐஏஎஸ் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 3 பெரிய ஆளுமைகளின் இறுதிச் சடங்கில் பொறுப்பேற்று பணிபுரிந்தது பாக்கியம் என அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

மதுரைச் சேர்ந்த அமுதா 1994 ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார். இவர் கடலூரில் துணை ஆட்சியராக பணியை தொடங்கிய நிலையில் தருமபுரி ஆட்சியர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது அந்த பாதிப்புகளை சரி செய்யும் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி களத்தில் இறங்கி பலரது உயிர்களை காப்பாற்றினார்.

முசோரி

முசோரி

உத்தரகாண்ட் மாநில முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியராக உள்ள நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்டு பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு பணியில் 3 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் அவர் மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடலூரில் வெள்ள பாதிப்புகள்

கடலூரில் வெள்ள பாதிப்புகள்

இதுகுறித்து அவர் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 1996 ஆம் ஆண்டு நான் பணிக்கு வரும் போது கருணாநிதிதான் முதல்வர். 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே கடலூரில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் நான் அவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரெயின்கோட்டுடன் போனேன். அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.

திருநீர்மலை

திருநீர்மலை

ஆனால் கருணாநிதி என்னை அனுமதிக்குமாறு கூறினார். களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர்கள் அப்படியேதான் வருவார்கள். போய் உடையை மாற்றிக் கொண்டு வரமாட்டார்கள் என்றார். அடுத்தது 1997 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அருகே திருநீர்மலையில் ஒரு சட்டவிரோத குவாரியால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது. இதனால் அந்த இடத்திற்கு போய் 40 , 50 லாரிகளை பறிமுதல் செய்துவிட்டு அந்த குவாரிக்கு சீல் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

பொதுமக்கள் முற்றுகை

பொதுமக்கள் முற்றுகை

அப்போது அந்த குவாரி ஆட்களும் பொதுமக்களும் குவாரியை திறக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினார்கள். எனது வாகனத்தை மறித்துக் கொண்டு முற்றுகையிட்டார்கள். நான் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்றேன். அப்போது சட்டசபையில் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளம் பெண் அதிகாரியை குவாரி விவகாரத்தில் இறக்கிவிட்டீர்கள். அந்த பெண் அதிகாரிக்கு பாதுகாப்புக் கூட தரவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

Recommended Video

    மீண்டும் Tamilnadu திரும்பிய Amutha IAS.. என்ன பதவி கிடைக்கும்
    சப் ஆட்சியர்

    சப் ஆட்சியர்

    அப்போது கருணாநிதி, அந்த சப் கலெக்டர் அமுதா நிறைய அதிரடிகளை செய்துள்ளார். அவர் சாதாரண அமுதா இல்லை அதிரடி அமுதா, மாலைக்குள் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவார். நான் சட்டசபையில் அறிக்கையை தாக்கல் செய்கிறேன் என்றார். அவருக்கு என் மீது எத்தனை நம்பிக்கை இருந்தது? செங்கல்பட்டில் மணல் மாபியா, திருநீர்மலை குவாரி எல்லாம் இருக்கிறது என தெரிந்து நான் அவற்றை சிறப்பாக கையாளுவேன் என தெரிந்தே என்னை அந்த மாவட்டத்திற்கு சப் கலெக்டராக கருணாநிதி பணியமர்த்தினார்.

    பணி கொடுக்கவில்லை

    பணி கொடுக்கவில்லை

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த போது எனக்கு அங்கு பணி கொடுக்கவில்லை. இருந்தாலும் நான் விடுப்பு எடுத்துக் கொண்டு அங்கு சென்றேன். அவர் உயிருடன் இருந்தவரை நான் அவரை காணாதது எனது துரதிருஷ்டம். உடனே அவரது இறுதிச் சடங்கை நடத்தும் பொறுப்பை எனக்கு ராமநாதபுரத்தில் கொடுத்தார்கள். அது போல் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் இறுதிச் சடங்கை ஏற்று நடத்தும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த எனக்கு தமிழகத்தின் 3 ஆளுமைகளின் இறுதிச் சடங்குகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தது என பாக்கியம்தான் என்றார் அமுதா ஐஏஎஸ்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+