Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம்.. 7 ஆண்டுகளுக்கு பிறகு வங்க கடலில் பாகங்கள் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை தாம்பரத்தில் இருந்து 29 வீரர்களுடன் புறப்பட்டு சென்ற விமானம் வங்க கடலில் மாயமானது. இந்த விமானத்தின் நிலை என்ன ஆனதோ என்றே கண்டுபிடிக்க முடியாத நிலையில், தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு சேத பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதில் ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டு வரும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

An-32 aircraft missing over the Bay of Bengal in 2016 discovered 310 kilometres off the Chennai coast

அந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கிளம்பிச் சென்றது. ஆனால் நடுவானில் அது வங்கக் கடலுக்கு மேலே செல்லும்போது மாயமாகி விட்டது. திடீரென விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானத்தின் நிலை என்ன விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன? என்பது குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டது.

29 பேர் பயணம்: அந்த விமானத்தில் 6 விமானிகள், 11 விமானப் படை வீரர்கள், 9 கடற்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை வீரர் ஒருவர் என மொத்தம் 29 பேர் பயணம் செய்தனர். விமானம் கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தீவிர தேடும் பணி நடைபெற்றது. ஆனால், பல நாட்களாக விடிய விடிய சோதனை நடைபெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனால் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கடிதம் எழுதிய இந்திய விமானப்படை, மாயமான விமானத்தை கண்டறிவதில் தோல்வி அடைந்து விட்டோம். எங்களுக்கு வேறு வழியில்லை. விமானத்தில் பயணம் செய்தவர்களை இறந்தவர்களாக கருதுகிறோம்” என்று கூறியிருந்தது.

8 ஆண்டுகளுக்கு பிறகு விடை: சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது அப்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்து நடைபெற்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது விமானத்தின் பாகங்கள் வங்க கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 310 கி.மீட்டர் தொலைவில் கடலுக்குள் விமானத்தில் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், வங்க கடலில் மாயமான விமானம் என்ன ஆனது என்ற விடை தெரியாமல் இருந்த இருந்த 7 அரை ஆண்டுகளுக்கு பிறகு கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+