சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொத்தென்று.. ஆளுநர் மாளிகையில் திடீரென கேட்ட சத்தம்.. ஓடி வந்த அதிகாரிகள்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு விழுந்த மர்ம பொருள் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீது பல்வேறு விஷயங்களில் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு ஆளுநர் ஆர். என் ரவிக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

ஆளுநர் ஆர். என் ரவிக்குக்கும் - முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டு தரப்பும் பல்வேறு விஷயங்களில் கடுமையான மோதி வருகின்றன.

2 நாட்களில் 2வது மரணம்.. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஏற்காத ஆளுநர்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்! 2 நாட்களில் 2வது மரணம்.. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஏற்காத ஆளுநர்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

பதவி நீக்கம்

பதவி நீக்கம்

இந்துத்துவா குறித்தும், சானதானம் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசுவது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் எம்பி வில்சன் ஆளுநரை நீக்க தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார்.

ரம்மி

ரம்மி

முக்கியமாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் தமிழ்நாட்டில் காலாவதியாகி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு மூலம், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அவர் இன்னும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவசர சட்டம் காலாவதியான நிலையில் மசோதா மட்டும் நிலுவையில் உள்ளது.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

இந்த சர்ச்சைகளுக்கு இடையில்தான் சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு விழுந்த மர்ம பொருள் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திடீரென இரவு நேரத்தில் வந்து ஒரு பொருள் விழுந்துள்ளது. கார்டன் பகுதியில் பொத்தென்று பெரிய சத்தத்தோடு பொருள் விழுந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாவலர்கள் வேகமாக ஓடி வந்துள்ளனர். என்ன சத்தம் என்பதை பார்ப்பதற்காக வந்துள்ளனர். கார்டன் பகுதியில் விசித்திரமான ஒரு பொருள் கிடப்பதை இவர்கள் பார்த்துள்ளனர்.

சோதனை

சோதனை

அதன்பின் அந்த பொருளை எடுத்து சோதனை செய்துள்ளனர். எதுவும் ஆபத்தான பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்துள்ளனர். கடைசியில் அது வானிலையை காட்டும் பலூன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. காலை மாலை நேரங்களில் வானிலையை காட்டுவதற்காக அனுப்பப்படும் பலூன் ஆகும். ஆனாலும் ஆளுநர் மாளிகையில் இது விழுந்தது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தற்போது போலீசார் 5 தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

English summary
An alarming sound came from the R N Ravi, governor office of Tamil Nadu: Police investigates .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X