துருவ் மார்க் 3.. சட்டென கொச்சி ஏர்போர்ட்டில் பார்த்தால் என்ன இது? அரண்டு போன ரன் வே.. என்ன நடந்தது?
சென்னை : கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று திடீரென கொச்சி விமான நிலைய ரன்வேயில் விபத்துக்குள்ளாகி இறங்கியது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவில் கடந்த 2020ம் ஆண்டு கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் மிகப்பெரிய அளவில் ஓடு பாதையில் விபத்துக்கு உள்ளானதை யாரும் மறக்க மாட்டார்கள். 21 பேரை பலி வாங்கிய இந்த விமான விபத்து இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்துகளில் பெரியதாக கருதப்படுகிறது.
ஓடுபாதை மிகவும் சிறியதாக இருந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இன்று கொச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது?
கொச்சி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் செல்லும் ரன்வே ஒன்றில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில் 1 நபர் காயம் அடைந்தார். கொச்சி விமான நிலையமே இதனால் பரபரப்பாக காணப்படுகிறது. கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்தான் விபத்தில் சிக்கி உள்ளது. அந்த ஹெலிகாப்டர் பயிற்சிக்காக அருகில் இருந்த ஹெலிபேட் ஒன்றில் இருந்து புறப்பட்டு உள்ளது. அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் இங்கும் அங்கும் சுற்ற தொடங்கி உள்ளது. கட்டுப்பாடின்றி அலை பாய தொடங்கி உள்ளது.

காயம்
இதை பைலட் கட்டுப்படுத்த முடிந்தும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருக்கும் கொச்சி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரை அவர் கொண்டு வந்துள்ளார். கொச்சி விமான நிலையத்தில் இறங்க அனுமதி கேட்டுள்ளார். அவசரம் என்பதால் அவருக்கும் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது . இதையடுத்து அவசர அவசரமாக அந்த ஹெலிகாப்டர் அங்கே தரையிறங்கியது. ஆனால் இறங்கும் போதே அந்த ஹெலிகாப்டர் தரையில் மோதியது.

மோதியது
வந்த வேகத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்தது. ஆனால் இதனால் ஹெலிகாப்டர் வெடித்து சிதறவில்லை. மற்றபடி பெரிய அளவில் பாகங்கள் மட்டும் சேதம் அடைந்தன. அந்த ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆகும். ALH Dhruv Mark 3 இது என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 3 பேரில் ஒருவர் காயம் அடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பயிற்சி
அந்த ஹெலிகாப்டரை சோதனைக்கு எடுத்து சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக கடலோர காவல்படை விசாரணை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 25 அடி உயரத்தில் பறக்கும் போது அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது. ஹெலிகாப்டர் நடுவானில் வட்டமாக சுற்ற தொடங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அந்த ரன் வே மொத்தமாக மூடப்பட்டு உள்ளது. அங்கிருந்து விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பின் அந்த ரன் வே சரி செய்யப்பட்டு பின்னர் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications