ஓணம் விடுமுறை.. வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று வழக்கம் போல செயல்படும்! பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: ஓணம் பண்டிகை காரணமாக வார விடுமுறையான இன்று, வழக்கம்போல வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாபலி மன்னனின் வருகையை கொண்டாடும் விதமாக கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது அத்திப்பூ கோலமிட்டு கேரள மக்கள் மகாபலி மன்னனை வரவேற்கின்றனர். 10 நாட்களும் வித்தியாசமான பூக்கள் கொண்டு கோலமிடப்படும்.

அதேபோல ஆறு சுவைகளில் 64 வகையான உணவுகள் தயாரிக்கப்படும். இது ஓண சாத்யா என்று அழைக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் போதுதான் இதுபோன்ற உணவுகளை மாநிலம் முழுவதும் மக்கள் தயாரிப்பார்கள். அதேபோல பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள். கேரளா மட்டுமல்லாது மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று வழக்கம்போல செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 1,00 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பூங்காவை மாநில அரசும், வனத்துறையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 160 ஆண்டுகள் பழமையான இந்த பூங்காவில் தற்போது இல்லாத உயிரினங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான உயிரினங்களை வண்டலூர் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
பட்டாம்பூச்சிகள் தொடங்கிய அரிய வகை பறவைகள், புலி, சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, நீர் யானை என ஏராளமான உயிரினங்கள் இங்கு இருக்கின்றன. இவற்றை பராமரிக்கவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இரவும் பகலுமாக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் மற்றும் மக்கள் மத்தியில் வன விலங்குகள் குறித்தும் சூழலியல் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த பூங்கா பெரிதும் உதவி புரிந்து வருகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 180 வகைகளை சேர்ந்த 2,500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு என தனி வரலாறு உள்ளது. இந்த வரலாறே பூங்காவின் தனிச்சிறப்பு என்று கூறலாம். இந்த பூங்கா 1854ல் ஒரு சிறுத்தை மற்றும் புலியுடன் தொடங்கப்பட்டது. முதலில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புறநகர் ரயில் நிலையத்திற்கு பின்னால் அமைந்திருந்தது. ஆனால் இப்பகுதியில் ஏற்பட்ட ஒலி மாசு காரணமாக 1975ல் இது வண்டலூருக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த பூங்காவின் உண்மையான வயது 168.
பூங்காவில் உள்ள உயிரினங்களை 24 மணி நேரமும் நேரலையில் மக்கள் கண்டுகளிக்கும் வசதியும் உள்ளது. பூங்காவில் புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' ரூ.23 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. பொதுவாக விழா நாட்கள், பண்டிகை தினங்களில் இந்த பூங்கா விடுப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக வார விடுப்பு தினமான இன்று வண்டலூர் பூங்கா வழக்கம் போல செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications