Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலங்கானாவிலும் ஸ்டாலின்தான் கிங்.. தரமான CM BFS ஆப்.. நொடிக்கு நொடி அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறமாநிலங்களைக்கூடப் பின்பற்ற வைத்திருக்கிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். ஆம்! சமீபத்தில் தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி ஆராய, தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்தது.

உணவை எப்படித் தயாரிக்கிறார்கள்? அதை எப்படி விநியோகிக்கிறார்கள்? அதன் தரம், சுவை எப்படி இருக்கிறது?... எனப் பல்வேறு தரவுகளைப் பற்றி அந்தக் குழு மிக நுணுக்கமாக ஆராய்ந்தது. அதன் அறிக்கையை தெலங்கானா முதல்வரிடம் சமர்ப்பித்தது.

An app that keeps track of the Chief Ministers breakfast scheme

அனைத்தையும் பற்றித் தீர ஆலோசித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரும் அக் 24 முதல், தனது மாநிலத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான காலை உணவுத் திட்டம் முதன்முறையாகப் பிற மாநிலத்தில் கால்பதித்துள்ளது. இது ஸ்டாலினின் திட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி.

An app that keeps track of the Chief Ministers breakfast scheme

மாநிலம் தாண்டி உள்ள முதல்வரின் மனதை மாற்றி உள்ள இந்தக் காலை உணவுத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா? அதற்காக உழைப்பவர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள 10 ஆரம்பப் பள்ளிகளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் அனைத்து மாவட்ட மையப் பகுதியில்தான் காலை உணவுத் திட்டத்திற்கான சமையல் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

An app that keeps track of the Chief Ministers breakfast scheme

இந்த மையங்கள் எப்படி தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று அரசே வழிகாட்டி விதிமுறைகளை மிகச் சரியாக வகுத்துக் கொடுத்துள்ளது என்பதுதான் முதல் ஹைலைட்.

பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை 9 மணிக்கு உணவைக் கொடுக்க வேண்டும் என்றால், அதைச் சமைப்பவர்கள் காலை 3 மணிக்கு தங்களின் பணியைத் தொடங்கியாக வேண்டும். அதைப் போன்றுதான் மாவட்ட மையங்களில் உள்ள அனைத்து சமையற்கூடங்களுக்கும் சமையல் செய்பவர்கள் காலை 3 மணிக்குச் சரியாக ஆஜர் ஆகிறார்கள்.

An app that keeps track of the Chief Ministers breakfast scheme

அவரும் அவருடன் உள்ள உதவியாளர்களும் அன்றைய மெனுவில் உள்ள உணவு வகை என்ன என்பதை அறிந்துகொண்டு, அதற்கான பொருட்களையும் காய்கறிகளையும் வெட்டி, அனைத்தையும் தயார் செய்துகொள்கிறார்கள்.

அப்படித் தயாரிக்கப்படும் உணவை, சமையற்கூடத்திலேயே காத்திருக்கும் அதிகாரி சுவைத்து அதன் தரத்தையும் ருசியையும் உறுதி செய்கிறார். சூடு குறைவதற்கு முன்னதாக, அங்கே உள்ள ஹாட் பாக்சுகளில் உணவுகள் சரியான அளவில் நிரப்பப்படுகின்றன.

An app that keeps track of the Chief Ministers breakfast scheme

அதன்பின்னர் அனைத்தையும் வாகனங்களில் ஏற்றுகிறார்கள். சரியாகக் காலை 7 மணிக்கு உணவு பெட்டிகளை ஏற்றியாக வேண்டும். அப்படி ஏற்றிய உணவை புகைப்படம் எடுத்து, இத்திட்டத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட CM BFS என்ற செயலியில் பதிவேற்றவேண்டும். அப்படிப் பதிவேற்றுவதன் மூலம் வாகனத்தில் எத்தனை மணிக்கு ஏற்றி உள்ளனர் என்பது மிகச் சரியாகப் பதிவு செய்யப்பட்டு விடும். அதன்பின்னர் எந்தவிதமான சால்ஜாப்புகளையும் அதிகாரிகள் சொல்ல முடியாது.

இப்படி உணவு தயாராகும் ஒவ்வொரு கட்டத்தையும்கூட இந்தச் செயலியில் அதிகாரிகள் பதிவேற்ற வேண்டும். காலை ஊழியர் பணிக்கு வந்தது, காய்கறிகளை வெட்டியது, பின் சமையல் செய்வது என அனைத்தும் செயலியில் புகைப்பட ஆவணங்களாகப் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்பது மிகமிக முக்கியமான செய்தி.

An app that keeps track of the Chief Ministers breakfast scheme

அதாவது காலை 3.30 தொடங்கி 6 மணிக்குள் அனைத்து சமையல் பணிகளையும் நிறைவு செய்தாக வேண்டும்.

இப்படி மாவட்ட மைய சமையல் கூடங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வாகனங்கள் வழியே கொண்டுசெல்லப்பட்டு, ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. ஒப்படைத்த உடனே செயலியில் புகைப்படம் ஏற்றப்படுகிறது.

An app that keeps track of the Chief Ministers breakfast scheme

அதன்பின்னர் தலைமையாசிரியர் உணவைச் சோதிப்பார். அவர் உணவு உணவின் அளவு சரியாக இருந்ததா? குறைகள் எதுவும் இல்லையா? போன்ற விவரங்களை CM BFS செயலியில் பதிவேற்றுவார். அதன்பின் உணவு சரியான நேரத்தில் பிள்ளைகளுக்குப் பரிமாறப்படுகின்றது. அதையும் புகைப்படமாகப் பதிவேற்றுவது தலைமையாசிரியரின் பணிதான்.

கோவை மேட்டுப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட காரமடைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனலட்சுமி, "முன்பு எல்லாம் பிள்ளைகள் 11 மணி ஆகிவிட்டால் சோர்ந்துவிடுவார்கள். அவர்களுக்குப் பாடமே சொல்லித்தர முடியாது. பசி மயக்கத்தில் இருப்பார்கள்.

ஆனால், காலை உணவுத்திட்டம் வந்த பிறகு வயிறு நிறைய உண்டுவிட்டு, தெம்பாக உட்கார்ந்து பாடம் கேட்கிறார்கள். இந்த மாற்றம் கல்வியைச் சிறப்பாக்கி இருக்கிறது" என்கிறார்.

An app that keeps track of the Chief Ministers breakfast scheme

இத்தனை சோதனைகளையும் தாண்டி, காலை உணவுத்திட்டத்தைக் கண்காணிப்பதற்காகவே மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் தனியாகக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இத்தனை மனித கண்களையும் கடந்து, என்ன நடக்கிறது? முறையாக நடக்கின்றதா? எனப் பிரத்தியேக செயலியும் நொடிக்கு நொடி புகைப்படங்களாகப் பதிவு செய்து, தவறு ஏதும் நடக்காமல் கண்காணித்துக் கொள்கிறது.

இவை எல்லாம் சரி, ஏன் படிக்கும் பிள்ளைகளுக்கு உணவுப் போட வேண்டும்? அப்படிப்பட்ட யோசனை ஏன் பிறந்தது முதல்வர் ஸ்டாலினுக்கு? அது குறித்து விளக்கம் அளிக்கிறார் பொருளாதார வல்லுநர் மற்றும் திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன்.

"முதலில் இங்கே பசிதான் பிரச்சினை. அரசுக் கல்வி தரவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால், அதைவிட முக்கியமாகப் பசி இருக்கிறது. நாம் காலகாலமாக ஆண்டான் அடிமை முறையில் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் சோறு போடுவார்கள்.

ஆகவே, அவர்கள் கல்வியைவிட சோற்றையும் கூலியையும் தேடிச் சென்றனர். அதை உணர்ந்துதான் அரசு பசியை முதலில் ஒழித்தால், ஆண்டான் அடிமை முறையை காலி செய்துவிட முடியும் என்று நம்பியது. அப்படி செய்ததால்தான் பள்ளிக்கு குழந்தைகள் வர ஆரம்பித்தனர். இதன் மூலம்தான் திராவிட இயக்கம் இங்கே பெரிய மாற்றத்தை செய்துள்ளது" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+