பச் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. இப்படி பண்ணாதீங்க! ஓபிஎஸ்ஸுக்கு பறந்த கால்.. பாய்ந்த சீனியர்
சென்னை: அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு சார்பாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய ஓ பன்னீர்செல்வம் மனு மீதான உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது
இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான மனுவில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது. தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு நடக்கும். அதிமுக பொதுக்குழுவும் நாளையே நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு விவகாரங்கள் பரபரப்பாக சென்று வரும் நிலையில்தான், திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக கேபி முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு சார்பாக புகார் வைத்துள்ளது. மேலும், அதிமுக ரகசியங்களை திமுகவிடம் சொல்லி வருவதாகவும் அதிமுகவின் சீனியர்களில் ஒருவரும் எடப்பாடியின் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி மீது, ஓபிஎஸ்சின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டியிருந்தார். இது அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

விளக்கம்
இது குறித்து நேற்று தன்னிலை விளக்கமளித்ததோடு, "கோவை செல்வராஜ் வெறும் அம்பு தான் ; எய்தவர் ஓ.பன்னீர்செல்வம் " என்று ஆரம்பித்து ஓபிஎஸ்சுக்கு எதிராக கடுமையாக பேசினார் கே.பி.முனுசாமி. இந்த நிலையில், ஓபிஎஸ்சை தொடர்பு கொண்டு,கே.பி.முனுசாமி சரமாரியாக பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி ஓபிஎஸ்ஸிடம் பேசிய கே.பி.முனுசாமி, " இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா? என்னுடன் மோதுவதாக இருந்தால் நேரடியாக மோதுங்கள்.

அல்லக்கைகள்
எதற்கு அல்லக்கைகளை விட்டு பேச வைத்து அசிங்கப்படுகிறீர்கள். உங்க மீது நிறைய மரியாதை வைத்திருந்தேன். அதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் வரும் ; மோதல்கள் வெடிக்கும். அதை நாம் தான் பேசித்தீர்க்க வேண்டும். ஆனா, உங்களுக்கு எதிரான விசயங்கள் அனைத்தும் நீங்களே உருவாக்கிக் கொண்டதுதான்.
Recommended Video

கோபம்
எந்த சூழலிலும் நம்பிக்கைக்குரிய ஆளாக நீங்கள் இருக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன், அதிகாரம் கைவிட்டு போவதாக நினைத்து கீழ்த்தரமான வேலைகளை செய்யாதீர்கள். மோதுவது எனில் நேரடியாக மோதுங்கள். இப்படி கூலிக்கு ஆளை வைத்து கூக்குரலிட வேண்டாம் " என ஓபிஎஸ்ஸை எச்சரிக்கும் தொணியில் பேசியுள்ளார் கே.பி.முனுசாமி. பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறதோ என்ற பதட்டம் அதிமுகவில் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்சை கே.பி.எம். எச்சரித்த விவகாரமும் ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications