Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு பாவமும் செய்யாத மகன்..தலையை வெட்டி கொடூரமாக கொன்றார்களே..கோகுல்ராஜ் அம்மா கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவர் இல்லாத நிலையிலும் கஷ்டப்பட்டு எனது மகனை வளர்த்து ஆளாக்கினேன். ஒருபாவமும் செய்யாத என்மகனை அதிர்ந்து கூட பேசாத எனது மகனை சித்ரவதை செய்து கொடூரமாக தலையை துண்டித்து கொன்று விட்டார்களே என்று கோகுல்ராஜ் அம்மா சித்ரா கண்ணீர் மல்க கூறினார்..குற்றவாளிகளுக்கு அந்த அர்த்தநாரீஸ்வரர் சரியான தண்டனை தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் தன்னுடன் படித்த சுவாதி என்ற பெண்ணை சாதி மாறி காதலித்ததாக கூறி தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாக்கு அறுக்கப்பட்டும் தலை துண்டிக்கப்பட்டும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு ஆணவக்கொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி விசாரணையில் இந்த கொலை சம்பவத்தை செய்தது யுவராஜூம் அவரது கூட்டளிகளும் என்று தெரிய வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. பலமுறை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போதும் சிரித்தபடியே வந்து தான் குற்றம் செய்யவில்லை என்று மறுத்து வந்தார் யுவராஜ்.

இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

An innocent son They cut off his head and killed him brutally says Gokulrajs mother Chitra

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு , கிரிதர் ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். 5 பேர் விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர். 5பேரின் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜின் தாயாரும் அப்பீல் செய்திருந்தார்.

தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் கடைசி வரை நீதிபதிகள் உறுதியாக இருந்தனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளே நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கோகுல்ராஜின் உடல் கிடந்த இடத்திற்கும் நேரில் சென்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த அப்பீல் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேலும் 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களையும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சின்ன வயசிலேயே என்னோட கணவர் இறந்து விட்டார். என் கணவர் 10வது வரை படித்திருந்தார். நான் 5வது வரைதான் படித்தேன். என் மகன்களை கஷ்டத்திற்கு இடையேயும் ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தேன். குடும்ப கஷ்டத்தை எனது மகன்களுக்கு சொன்னதில்லை. மம்மி என்று சொன்னால் ஏன் சாமி என்றுதான் சொல்வேன் என்று கூறினார்.

என் மகன் திருடவில்லை. யாரையும் எதையும் செய்ததில்லை. அந்த பிள்ளையை அழைத்துக்கொண்டு போய் இப்படி கொன்று போட்டு விட்டனர். எனது மகனை கொன்றவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். அதனை அந்த அர்த்தநாரீஸ்வரர் கொடுப்பார் என்று கண்ணீர் மல்க கூறினார்.

எவ்வளவு பெரிய தப்பு செய்தவர்களை விட்டு விட்டு என் மகனை சித்ரவதை செய்து தலையை துண்டித்து கொடூரமாக கொன்று போட்டார்கள். அப்படி என்ன வெறி? நாங்க என்ன தப்பு செய்தோம்? என்று கேட்டார். எனது மகனை கொன்றவர்களுக்கு சரியான தண்டனையை நீதிபதிகள் அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
எத்தனை சிரமமான சூழ்நிலையிலும் எங்களுக்காக வாதாடி வெற்றி பெற வைத்துள்ளார். வழக்கறிஞர்களுக்கு நன்றி என்றும் கூறினார் கோகுல்ராஜின் தாயார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் மோகன், இந்த வழக்கில் சாட்சியங்களை பாதுகாப்பது கடும் சவாலாக இருந்ததாக கூறினார். முக்கிய சாட்சியான சுவாதிக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தால் அவர் பிறழ் சாட்சியாக மாறியிருக்க மாட்டார் என்றும் கூறினார்.. அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலையை பார்த்தேன். சுவாதி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரிடம் வழக்கிற்கு தேவையான கேள்விகளை மட்டுமே கேட்டேன். இது ஒரு கூட்டு உழைப்பு அனைவரின் ஒத்துழைப்பு போராட்டம் காரணமாகவே இந்த வழக்கு இந்த அளவிற்கு வெற்றி பெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+