ஒன்றல்ல.. இரண்டல்ல.. அடுத்தடுத்து 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு.. இன்ஸ்டாகிராம் பிரபலம் பரிதாப பலி
சென்னை: சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் பெண் ஒருவர் மரணம் அடைந்தது இணைய உலகை உலுக்கி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பிரபலமான பாடிபில்டர் ஜோ லிண்டர் தனது 30வது வயதில் கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். பாடிபில்டிங் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை YouTube இல் பகிர்வதில் ஜோ லிண்டர் பிரபலமானவர். இளைஞர்கள் இடையே மிகப்பெரிய சூப்பர் ஹீரோவாக, சிக்மா ஆணாக ஜோ லிண்டர் திகழ்ந்து வந்தார். பாடிபில்டிங் தொடர்பாக தினசரி செய்யும் பயிற்சிகள் மற்றும் ஆன்லைனில் அவர் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களால் ஜோ பெரிய அளவில் கவனிக்கப்பட்டார் .

அவர் ஜோஸ்தெடிக்ஸ் பயிற்சி அமைப்பு என்று தனது சொந்த பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதை இளைஞர்கள் இடையே பிரபலமாகி கொண்டு சென்றார்.அவரது காதலியான சக பாடிபில்டர் நிச்சா உடன் இணைந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் பாடி பில்டிங் தொடர்பாக ரீலிஸ் போட்டு வந்தார். இந்த நிலையில்தான் நேற்று மாலை அவர் நரம்பு வெடித்து பலியானார். இந்தச் செய்தியை அவரது நெருங்கிய நண்பரான நோயல் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தார்.
இணையத்தில் ஜோ பலருக்கு ரோல் மாடலாக இருந்தார். அவரது திடீர் மறைவு பாடிபில்டிங் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிச்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், அனியூரிசம் என்று நோயின் காரணமாக ஜோ காலமானார் என்று கூறி உள்ளார்.
சர்வதேச பிரபலம்; சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் பெண் ஒருவர் மரணம் அடைந்தது இணைய உலகை உலுக்கி உள்ளது.
லுவானா ஆண்ட்ரேட் என்னும் 29 வயதான பிரேசிலிய பிரபலம்தான் மரணம் அடைந்தார்., முழங்காலில் லிபோசக்சன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். இவருக்கு நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்தார்.
liposuction என்பது உடலில் உள்ள கொழுப்புகளை எடுப்பது ஆகும். கொழுப்புறிஞ்சல் என்பது உடலில் அதிக அளவில் உள்ள கொழுப்புகளை அகற்றுவதற்கு செய்யப்படுகிற ஒரு அறுவை சிகிச்சை அகும். லுவானா ஆண்ட்ரேட் இன்ஸ்டா பிரபலம் என்பதால் அழகாக இருக்க வேண்டும், உடல் மெல்லிசாக இருக்க வேண்டும் என்று இப்படி கொழுப்பை எடுத்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சையின் போது அவருக்கு ரத்த கட்டு ஏற்பட்டு உள்ளது. உடல் முழுக்க பல இடங்களில் ரத்த கட்டு ஏற்பட்டு உள்ளது. இது இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்துள்ளது. இதனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகி உள்ளார். ஒருமுறை அல்ல.. 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு பலியாகி உள்ளார்.
இணையத்தில் பிரபலமாக இருக்க வேண்டும் என்று இவர் செய்தது அவருக்கே எதிராக திரும்பி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின் உடல் இந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. பாதி கொழுப்பை உறிஞ்சி கொண்டு இருக்கும் போதே அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த அறுவை சிகிச்சையின் போது அவருக்கு ரத்த கட்டு ஏற்பட்டு உள்ளது. உடல் முழுக்க பல இடங்களில் ரத்த கட்டு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் அது அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications