ரோஜா என்னும் தேவதை.. ரூ.6000 நிவாரணம் தரப்படும் ரேஷனில் பரபரப்பு.. அப்படியே சிலிர்த்து நின்ற மக்கள்
சென்னை: சென்னையில் வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்ட ரேஷன் கடை ஒன்றில் நடந்த சம்பவம் மக்களை சிலிர்க்க வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்

அதேபோல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு உத்தரவு: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல் வெள்ளம்: “மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9.12.2023 அன்று அறிவிப்பினை வெளியிட்டார்.
சிலிர்க்க வைத்துள்ளது: இந்த நிலையில்தான் சென்னையில் வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்ட ரேஷன் கடை ஒன்றில் நடந்த சம்பவம் மக்களை சிலிர்க்க வைத்துள்ளது. அதன்படி ரேஷன் கடையில் லைனில் நின்று திருநங்கை ரோஜா என்பவர் பணம் வாங்கி உள்ளார்.
சென்னையில் ரேஷன் கார்ட் உள்ள அவர்.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் பொருட்களை இழந்துள்ளார். இதையடுத்து லைனில் நின்று நேற்று அவர் 6000 ரூபாயை வாங்கி உள்ளார். கே கே உள்ள ரேஷன் கடை ஒன்றில் அவர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் பணத்தை வாங்கிய நிலையில் தனக்கு கொடுத்த பணத்தை இயலாதோருக்கு பிரித்து கொடுத்துள்ளார் திருநங்கை ரோஜா. அங்கே வசிக்கும் பிச்சைக்காரர்கள், லைனில் நின்ற சில ஏழைகள் ஆகியோருக்கு அந்த பணத்தை பிரித்து கொடுத்துள்ளார்.
அவரின் இந்த செயல் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளத்தில் சேதாரம் ஏற்பட்டும் கூட அவர் இப்படி நடந்து கொண்டது பாராட்டுகளை பெற்றுள்ளது.
வெள்ள நிவாரணமாக பணமாக ரூ.6000/- கொடுத்ததையும் வாங்கி வெச்சிக்கிட்டு தமிழ்நாடு அரசை குறை சொல்லும் தற்குறி சங்கி தம்பிகளுக்கு நடுவே, லைன்ல நின்னு தனக்கு கொடுத்த பணத்தை இயலாதோருக்கு பிரித்து கொடுத்த திருநங்கை ரோஜா அக்கா, ஒரு தேவதை! ♥ pic.twitter.com/coryCuThYJ
— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) December 22, 2023
நிவாரணம் வழங்கப்படும்: இந்த நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள், ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.6000/- நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications