நிலத்தை வைத்திருப்போர் தெரிஞ்சுக்கணும்.. அனாதீனம் நிலம் என்றால் என்ன? இதுக்கு பட்டா கிடைக்குமா? ஓஹோ
சென்னை: எப்போதுமே வீடு, மனை வாங்கும்போது, நிலம் தொடர்பான பல்வேறு சட்ட ரீதியான விஷயங்களில் தெளிவாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். காரணம் நீங்கள் வாங்கும் இடம் எங்குள்ளது? அது அமைந்துள்ள நிலம் யாருடையது என்பது தொடர்பான ஆவண ஆதாரங்களையும் கேட்டு பெற வேண்டியிருக்கிறது. அந்தவகையில், அனாதீனம் நிலம் என்றால் என்ன? என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய நாட்டில் ஒரு சில நபர்களிடம் ஒட்டுமொத்த நில உரிமையும் குவிய கூடாது என்பதற்காகவே அமல்படுத்தப்பட்ட சட்டம்தான், நில உச்சவரம்பு சட்டம்.. இதன்படி, தனி நபர்கள், குடும்பங்களுக்கு கூட்டாகவும், அமைப்புகள் பெயரில் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்ற வரம்பு உள்ளது..

நில உச்ச வரம்பு சட்டத்தின் அடிப்படையில் 30 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. 30 ஏக்கருக்கு மேல் யாராவது நிலம் வைத்திருந்தால் அது அரசாங்கத்திற்கு சேரும்.. இப்படி நிர்ணயிக்கப்பட்டதற்கு மேல், நிலம் இருந்தால் அது அரசுக்கு சொந்தமாகிவிடும் என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம்.
உச்சவரம்பு: பொதுவாக, உச்சவரம்பு சட்டப்படி அரசுடைமையான நிலங்கள் அனைத்துமே வருவாய் துறையின் கட்டுப்பாட்டில்தான்.. ஒருவேளை இது போன்ற நிலங்களில் யாரும் உரிமை கோராவிட்டால், அந்த நிலங்களுக்கு "அனாதீனம்" என்ற வகைசெய்யப்பட்டு, வருவாய் துறையே பராமரிக்கும். சுருக்கமாக சொல்லப்போனால், என்பது அரசாங்கத்தின் கீழ் கையகப்படுத்தி இருக்கும் அல்லது அரசாங்கம் கைப்பற்றியிருக்கும் நிலங்களையே அனாதீனம் நிலம் என்கிறோம்..
இப்படியான நிலங்கள் பெரும்பாலும், நிலச்சீர்த்திருத்த சட்டப்படி/ரயத்துவாரி சட்டப்படி ஜமீன்தாரர்களிடமிருந்து, அரசால் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களாக இருக்கும்.
பட்டா கிடையாது: அரசாங்கம் கைப்பற்றிய இந்த நிலங்களுக்கு பட்டா கிடையாது... அரசாங்க நிலம் என்று தெரியாமலேயே அதை வாங்கிவிட்டாலும்கூட, உங்களுக்கு அந்த நிலத்திற்கு பட்டா கிடைக்காது. அந்த நிலத்தை நீங்கள் விற்கவும் முடியாது. அதேபோல, நீங்கள் வைத்திருக்கும் நிலத்திற்கு பழைய பட்டா இருந்தாலும் அதை நீங்கள் விற்க கூடாது... இதை பதிவு செய்தாலும், அது மோசடி குற்றமாகிவிடும்..
மேலும், CMDA, DTCP போன்றவற்றின் அங்கீகாரம் இல்லாத மனைகளாக இந்த அனாதீனம் நிலங்கள் இருக்கும். அங்கீகாரம் இல்லாததால், இந்த நிலங்களை தனி நபர் யாராலும் உரிமை கொண்டாடவும் முடியாது.. எனவே, நிலம் வாங்கும்போது அந்த நிலத்தை பற்றி முழுவதுமாக விசாரித்த பிறகே வாங்க வேண்டும்.
நீதிமன்றம்: ஒருவேளை, தனியாருக்கு சொந்தமான நிலம் கணினியில் தவறுதலாக அனாதீன நிலமாக வகைப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் உரிய உரிமை ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே அனாதீனம் ரத்து செய்யப்படும். அதேபோல, அனாதீன நிலத்திற்கு யாருக்காவது பட்டா கிடைத்திருக்கிறதென்றால், அதை வைத்து நீதிமன்றத்தை நாடி, பட்டா பெற முயற்சிக்கலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications