"அடிக்க போகுது ஜாக்பாட்.. தங்கம் விலை இருக்கே.." அடுத்து ஆனந்த் சீனிவாசன் சொன்ன முக்கிய மேட்டர்! செம
சென்னை: தங்கம் விலை சில மாதங்களாகவே பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமலேயே இருந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்போதும் முதலீடு செய்ய விரும்புவது தங்கத்தில் தான். நீண்ட கால நோக்கில் தங்கம் விலை என்றைக்குமே குறையாது.கொரோனாவுக்கு முன்பு 4 ஆயிரம் என்ற ரேஞ்சில் இருந்த தங்கம் அதன் பிறகு மடமடவென அதிகரித்தது அனைவருக்கும் தெரியும்.

மேலும், பணம் தேவை என்றால் உடனடியாக நமக்குத் தங்கம் உதவும் என்பதாலேயே தங்கத்தை வாங்க மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருவார்கள். இதற்கிடையே தங்கம் கடந்த சில காலமாகப் பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்து வந்தது.
தங்கம்: இந்தச் சூழலில் தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் கூறுகையில், "தங்கம் விலை இப்போது ஒரு கிராம் 5,500 என்ற ரேஞ்சில் இருக்கிறது. நம் நாட்டில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது வெளிநாடுகளில் பெரியளவில் தங்கம் விலை குறைந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், தங்கம் விலை ஏறியுள்ளது. அதேபோல ரூபாய் மதிப்பும் குறைந்துள்ளது.
அதேபோல மறுபுறம் ஜப்பான் நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் அங்கும் அதிகளவில் மக்கள் தங்கத்தை வாங்க ஆரம்பித்துள்ளனர். வலுவடைந்து வரும் டாலர், சரியும் ரூபாய் மதிப்பு ஆகியவற்றுடன் இணைந்து கூடவே நமது நாட்டில் விதிக்கப்படும் வரிகளும் சேர்ந்து கொள்வதால் நமது நாட்டில் தங்கம் விலை பெரியளவில் இறங்காது. அதேபோல ஏறவும் செய்யாது. இதே அளவில் தான் இருக்கும். 18 மாதங்களுக்குப் பிறகு லாட்டரி சீட் அடிக்கும்" என்று அவர் கூறினார்.
அமெரிக்கா: அதென்ன 18 மாதங்கள் என்று கேட்கிறீர்களா.. அமெரிக்காவில் விலைவாசி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. எனவே, இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கே கிட்டத்தட்ட ஜீரோவாக இருந்த வட்டியை மெல்ல உயர்த்தப்பட்டு இப்போது 5.5ஆக இருக்கிறது. தங்கம் விலை அதிகரிக்காமல் சில காலமாக குறைந்து வர இந்த வட்டி விகிதமே காரணமாகும்.
அடுத்த 18 மாதங்களுக்கு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காது என்றே தெரிகிறது. இதே 5.5% என்ற ரேஞ்சில் இருக்கும் வரை தங்கம் விலை பெரியளவில் ஏறாது. வட்டி விகதத்தை மேலும் உயர்த்தினால், இன்னும் கூட தங்கம் விலை குறையும். அதேநேரம் எப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்குகிறதோ.. அப்போது தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கும்.
அதென்ன 18 மாதங்கள்: விலைவாசி எல்லாம் கட்டுக்குள் வந்த பிறகு.. அடுத்த 18 மாதங்கள் கழித்தே அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே தங்கம் விலை உயரும். எனவே, அதுவரை அனைவரும் தங்களால் முடிந்தவரைத் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இந்த காலகட்டத்தில் தங்கத்தை வாங்குவது சரியானதாக இருக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது பொதுவாகப் பொருளாதார செய்திகள் மட்டுமே. இதை வைத்து யாரும் முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கக் கூடாது. எந்தவொரு விஷயத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு முறையாக ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
-
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications