கே.பாலசந்தருக்கு வந்த மொட்டை கடிதாசி! மண்டை மேல இருக்கும் கொண்டையை மறந்து சிக்கிய "அந்த" நபர்!
சென்னை: இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிகரெட் பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தி தினமும் அவருக்கு கடிதம் வரும். அதை எழுதியது யார் தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "இதோ இதோ என் பல்லவி" பாட்டு திடீர்னு பார்க்க ஆசை வந்து அதை யூடியூப்ல பார்த்தேன். அடடா... என்ன கட்ஸ்.... பாட்டுக்கேற்ற மாதிரி அனந்துவோட ஷாட்ஸ்.... அபாரம். அனந்து மாதிரி ஒரு டைரக்ஷன் நாலெட்ஜ் உள்ள ஒரு ஆளை இந்த பாலச்சந்தர் பிடிச்சு கணக்குப்பிள்ளையாகவே வைத்திருந்தது ரொம்பக் கொடுமை.

அந்த பாடலில் பாலு சார், ராதா காதல் தான் காட்சிகள். அனந்துவுக்கு நல்லாத் தெரியும். மத்திய வயது போல உள்ள பாலுவும், உடம்பு ஊதி வயதான ராதாவும் தான் தன் நாயகன்-நாயகின்னு. அவங்களுக்கேற்ற காதல் காட்சிகளை வைக்கணுமே. நிறைய ஷாட்ஸ் அவங்க சந்தோஷமா சிரிப்பதை டைட் க்ளோஸப் எடுத்து செகண்டுக்கு ஒரு சேஞ்ச்.. அதுவும் இசைக்கேற்ப.... அருமை.
அனந்துவோட இந்த படம் நாயகன் மாதிரி ஜம்ப் கட்டோட ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை சொல்வதற்கு முயற்சி செய்து காட்சிக் கோர்வைகளில் தடுமாறி இருப்பது துரதிர்ஷ்டம்.
காதலில் தோற்ற மகனால் படும் அல்லல், மனைவி இழப்பு என பாலு நடிப்பில் அசத்தி இருப்பார். ஆனால் கேளடி கண்மணியில் இருந்த துள்ளல் சிகரம் பாலுவிடம் மிஸ்ஸிங்.
வயதான காதலுக்கு தான் இப்படின்னா ஆனந்த் பாபு-ரம்யா காதலுக்கு இளமைத் துள்ளல் ஷாட்கள். ரம்யாவின் தொப்புளை வாயாக்கி உடம்பில் வரைந்த ஓவியம், மூடிய இமைகளின் மீது கண்கள் என ஆனந்த் பாபு- ரம்யா காதலை அழகாக காட்சிப்படுத்தி இருப்பார். அனந்து ஒரு சினிமாக் களஞ்சியம் என பலரும் சொல்லி இருக்கிறார்கள். அவர் பார்க்காத ஆங்கிலப் படம் கிடையாது.
கமல்ஹாசனை ஆக்ஷன் மசாலாப் படங்களிலிருந்து திசை திருப்பி விட்டது அனந்துவின் கைங்கர்யம். பாலச்சந்தர் என்கிற இயக்குனருக்கு பின்பலமாக கடைசி வரை அனந்து நின்றதனால் நமக்கு பல நல்ல கே.பி படங்கள் கிடைத்தன. அனந்து-கே.பி பந்தம் அது வேறு மாதிரி. பாலச்சந்தர் நிறைய சிகரெட் பிடிப்பார். தினமும் அவருக்கு தவறாமல் ஒரு கடிதம் வரும்.
அக்கடிதத்தில் சிகரெட் பிடிப்பதனால் வரும் தீமைகளைப்பற்றி பாரா பாராவாக இருக்குமாம். ஆனால் பெயர் இருக்காது. ஒரு நாள் வந்தக் கடிதத்தில் அனுப்பிய மர்மநபர் தன் கையாலேயே முகவரியை எழுத பாலச்சந்தர் கண்டுபிடித்துவிட்டார். நம்ம அனந்துவின் கையெழுத்தாச்சே...." உன் வேலை தானா இது?"
"ஆமாம்...தெரிஞ்சவன் சொல்வதை விட தெரியாதவன் சொல்லும் போது தான் தவறின் விளைவுகள் உடனே தலைக்கேறும்"னு அனந்து சொல்ல, கே.பி சிரித்திருக்கிறார். இது தான் அனந்து. ஏற்றி விடும் ஏணி. சுந்தர் என்கிற வில்லன் நடிகர் வாய்ப்பில்லாத காலங்களில் நேரே அனந்துவின் அலுவலகத்துக்கு போய் விடுவாராம். அனந்துவும் சுந்தரோடு உள்ளுர் சினிமா முதல் உலக சினிமா வரை விவாதிப்பாராம். பின் இருவரும் மௌண்ட் ரோடு போய் ஆங்கிலப் படங்கள் பார்ப்பார்களாம். வயதேயில்லாத நட்பு..
சிகரம் படத்தில் பாலுவே இசை. அவ்வளவு அழகான பாடல்கள். வண்ணம் கொண்ட வெண்ணிலவே, அகரம் இப்போ சிகரம் ஆச்சு... பாடல்கள் பாலுவின் தனி ஆவர்த்தனம். 'இதோ இதோ' பாடல் பாலுவின் இசையில் கன்னடப் படமான 'சௌபாக்ய லக்ஷ்மி' படத்தில் வந்தப் பாடல். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடல் ஜெய்தேவ் இசையில் 'ஹம்தோனோ' படத்தில் வந்த 'கபி ஹுத்பே பாடலின் இன்ஸ்பிரேஷன்.... டியூன்களுக்கு பாடல் எழுதப்பட்ட போது அனந்து வைரமுத்து எழுதிய ஒரு கவிதையை பாலுவிடம் கொடுத்திருக்கிறார்.
பாலு அதற்கு இரண்டு வெவ்வேறு டியூன்கள் போட்டு அது படத்திலும் இருந்தன. 'உன்னை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன்....'. 'இடுப்புக்குடங்கள் குலுங்க குலுங்க'ன்னு டப்பாங்குத்து போட்டிருப்பார். செம.... பாடல்கள் வெற்றி பெற்றும் எடிட்டிங் குழப்பத்தால் படம் போராக நகர்ந்தது. மேலும் சிகரம் போன்ற படங்கள் தோற்க அன்று ஒரு பெரிய ஒரு காரணமும் இருந்தது. அது சுஜாதா பிலிம்ஸ் என்கிற டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி.
மறைந்த ஜீவியுடையது. ஜீவி நல்லப் படங்களையெல்லாம் வாங்குவார். ஆனால் அவர் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஒரு ஆள் என்ன செய்தாரென்றால் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நலிந்த தியேட்டரை லீசுக்கு எடுத்து அதை புதுப்பித்து தியேட்டர் ஓனரோடு டெர்ம்ஸ் பேசி படத்தை வெளியிட்டார். இதனால் நல்ல பெயர் பெற்ற திரையரங்கில் வெளியாக வேண்டிய படங்களெல்லாம் ஒதுக்குப்புற தியேட்டரில் வெளியாகி வசூல் படுபாதிப்பு.
உதாரணத்துக்கு அஞ்சலி படத்தின் ரிலீஸ் பேப்பரில் தியேட்டர் பெயர்களை பார்த்தாலே தெரியும். இந்த உள்வேலை ஜீவிக்கே தெரியாதது தான் ஜீவியின் பிற்கால பிரச்சினைகளுக்கு காரணம். சிகரம் தோல்வி அனந்துவின் இயக்கும் ஆசையை முடித்து வைத்து விட்டது. நிறைய படங்களில் பாலச்சந்தருக்கு வசனம் உதவி அனந்து தான். அனந்து, கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் புகைப்படமாக இருக்கிறார் என்றால் அவரின் அறிவின் செறிவு புரியும். இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications