வந்தே பாரத்தை விடுங்க.. தென் மாவட்ட பயணிகளுக்கு இன்னொரு 'குட்' நியூஸ் சொன்ன ரயில்வே.. செம தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தே பாரத் ரயில் சேவை துவங்கி வைக்கப்பட்ட நிலையில், தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்னொரு 'சூப்பர்' அப்டேட்டை தெற்கு ரயில்வே கொடுத்துள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர்,செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பணி நிமித்தமாகவும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காகவும் சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்ட மக்கள் பலரும் விடுமுறை காலங்களிலும் சொந்த ஊர்களில் நடைபெறும் திருவிழா உள்பட பண்டிகை நாட்களின் போது சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

Ananthapuri Express will Change to Super fast express train from october 1 says Southern Railway

இதனால், மதுரை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் இந்த ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. சாதாரண நாட்களில் கூட இந்த ரயில்களில் டிக்கெட்டுகள் கிடைக்காது. அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இருக்கும். அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சொல்லவே தேவையில்லை. முன்பதிவு பெட்டிகளில் எல்லாம் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கடுமையான கூட்டம் காணப்படும்.

தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயிலும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரயில் புக்கிங் தொடங்கியதில் இருந்து மள மளவென டிக்கெட் ஃபுல் ஆகி வருகிறது. சென்னையில் இருந்து மதியம் 2.50க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு இரவு 10.40க்கு சென்று விடுகிறது.

8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நெல்லைக்கு சென்று விடுவதால் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க பெரிதும் விருப்பப்படுகின்றனர். வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இதனிடையே, தென் மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை எக்மோரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எக்மோருக்கு காலை 8.20 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. இதனால் தென் மாவட்ட மக்கள் அதிக அளவு பயணிப்பார்கள்.

இந்த நிலையில், தான் வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக 20 நிமிடத்துக்கு முன்னதாக இரவு 7.50 மணிக்கு இனி புறப்படும்.

திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக 1.05 மணிக்கும், மதுரை ரயில் நிலையத்திற்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும் வந்து சேரும். அதேபோல் திருநெல்வேலிக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக 6.05 மணிக்கு இனி சென்றடையும். கொல்லம் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கே சென்று விடும்.

கொல்லத்தில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்பட்டு வந்த இந்த ரயில் இனி 50 நிமிடம் முன்னதாக புறப்படும். அதாவது மதியம் 2.50 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை எக்மோருக்கு காலை 6.05 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+