அன்புமணியை பாருங்களேன்.. டாக்டர் கோர்டில் ஸ்டெதஸ்கோப் அணிந்து எண்ணூர் மக்களுக்கு உடல்நல பரிசோதனை
சென்னை: எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மக்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு நடத்தும் மருத்துவ முகாமில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவராக களமிறங்கி உடல் நல பரிசோதனையை மேற்கொண்டார்.
மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக இம்மாத தொடக்கத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது வட சென்னையின் மணலி, எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் எண்ணூர், மணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் எண்ணெய் கசிவு கலந்த வெள்ள நீர் புகுந்தது.

சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் எண்ணெய் திட்டுக்கள் காட்சியளித்தன. வட சென்னையின் பல பகுதிகளில் காற்றில் எண்ணெய்யின் வாசம் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள், சிறுவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்று கூறப்பட்டது. வெள்ளம் மற்றும் எண்ணெய் கசிவு காரணமாக எண்ணூர் பகுதி மீனவ மக்களின் படகுகளும் சேதமடைந்தன.
இதன் காரணமாக மீனவ மக்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் நிவாரணமும், பொதுமக்களுக்கு தலா ரூ.7500 நிவாரணமும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தலைமை தாங்கி வரும் பசுமை தாயகம் அமைப்பு எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்தை கையில் எடுத்து இருக்கிறது. அண்மையில் சௌமியா அன்புமணி எண்ணூர் பகுதிக்கு சென்று அங்கு உள்ள நிலைமையை பார்வையிட்டார்.
இந்த நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பசுமைத் தாயகம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் சென்னை நேரு நகர் மாநகராட்சி பள்ளி வளாகம், எண்ணூர் சிவன் படை குப்பம், கமலம்மாள் நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பசுமைத் தாயகம் வெளியிட்ட அறிவிப்பில், " பசுமைத் தாயகம் சார்பில் சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம். நாள்: 26.12.2023 செவ்வாய் கிழமை; நேரம்: காலை 9.00 மணி முதல்; இடம்: சென்னை மாநகராட்சி பள்ளி வளாகம் (நேரு நகர்), எல்லையம்மன் கோயில் அருகில், சிவன் படை குப்பம், எண்ணூர், சென்னை - 600057. (கமலம்மாள் நகர், நேரு நகர், இந்திரா நகர்)
தொடக்கி வைப்பவர்: மருத்துவர் அன்புமணி இராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர், மேனாள் இந்திய சுகாதார அமைச்சர், ஆலோசகர், பசுமைத் தாயகம். பங்கேற்பு: மருத்துவர் சரத்ராஜ் ஜெயச்சந்திரன் MBBS, MD FIPM (ஐந்து ரூபாய் மருத்துவர், "மக்கள் மருத்துவர்" எஸ். ஜெயச்சந்திரன் அவர்களது மகன்) மற்றும் சிறப்பு மருத்துவர்கள் & மருத்துவக் குழுவினர் பங்கேற்க உள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி அன்புமணி இந்த முகாமை தொடங்கி வைத்தது மட்டுமின்றி வெள்ளை கோர்ட் அணிந்து ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு மக்களுக்கு உடல்நல பரிசோதனையை மேற்கொண்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications