மனைவி வெற்றியைவிட.. பென்னாகரம் தொகுதியில் ஜிகே மணி மகன் தோல்வி பெருசு.. தீவிரம் காட்டும் அன்புமணி!
சென்னை: பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஜிகே மணியின் மகன் தமிழ்க்குமரனை தோற்கடிக்க வேண்டும் என்பதில் பாமக தலைவர் அன்புமணி தீவிரமாக இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காக தர்மபுரி வந்த அன்புமணி, தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் மனைவி செளமியா தொகுதியை விடவும், முதல் தொகுதியாக பென்னாகரத்தில் பாமக வேட்பாளர் செல்வத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாமக இரண்டு பிரிவாக பிரிந்து தேர்தலை சந்திக்கும் சூழலில், இம்முறை தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் பாமக தலைவர் அன்புமணி பிடிவாதமாக இருக்கிறார். அதேபோல் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் யாரும் இடைஞ்சலாக இருந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அன்புமணி, பென்னாகரம் தொகுதி கையை விட்டு போய்விடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தமிழ்க்குமரன்
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டு ஜிகே மணி வென்றார். ஆனால் ஜிகே மணியுடன் அன்புமணிக்கு மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ராமதாஸ் உடனான பிரிவுக்கு காரணமே ஜிகே மணி தான் என்று கொந்தளித்தார். இதனிடையே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வென்ற ஜிகேஎம் தமிழ்க்குமரன், திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பென்னாகரம் தொகுதியில் பாமக
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜிகேஎம் தமிழ்க்குமரனுக்கு ஒரே வாரத்தில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. தனது தொகுதியை ஜிகே மணி தனது மகனுக்கு கொடுத்திருப்பதாக பார்க்கப்பட்டது. இந்த தொகுதி அதிமுக கூட்டணி பாமக போட்டியிடுகிறது. பாமக வேட்பாளராக செல்வம் களத்தில் இருக்கிறார்.
அன்புமணி தீவிரம்
இந்த நிலையில் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்க்குமரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அன்புமணி தீவிரமாக இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காக தர்மபுரி மாவட்டம் வந்த அன்புமணி, முதல் தொகுதியாக பென்னாகரம் தொகுதிக்கு சென்று செல்வத்திற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அன்புமணி இறக்கிய டீம்
தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் மனைவி செளமியா அன்புமணியின் தொகுதிக்கு கூட நேராக அன்புமணி செல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் ஜிகேஎம் தமிழ்க்குமரனை வீழ்த்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாமக நிர்வாகிகளை அன்புமணி இறக்கி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். ஜிகேஎம் தமிழ்க்குமரன் முதலில் பாமகவில் தான் இருந்தார்.
வெல்வாரா தமிழ்க்குமரன்?
பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு தமிழ்க்குமரனுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அன்புமணி உடனான மோதல் காரணமாக தமிழ்க்குமரன் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இதன்பின் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டாத தமிழ்க்குமரன், திடீரென காங்கிரஸில் இணைந்து சீட்டை பெற்றுள்ளார். இதனால் தந்தை கோலோச்சிய தொகுதியில் தமிழ்க்குமரன் வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications