Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநரின் செயல் துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது!தமிழக அரசு இதை செய்யணும்- அன்புமணி ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது என்று பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல பல விஷங்கள் மாறுபட்டு இருந்தாலும் கூட நீட் விலக்கு விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.

 நீட் மசோதா

நீட் மசோதா

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு நீட் பாதிப்பு குறித்த தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதை எல்லாம் அடிப்படையாக வைத்தே திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் தயார் செய்திருந்தது. இந்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.

 திருப்பி அனுப்பிய ஆளுநர்

திருப்பி அனுப்பிய ஆளுநர்

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது என்று பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது. நீட் விலக்கு சட்டத்தைத் திருப்பி அனுப்புவதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆளுநர் கூறியுள்ள காரணங்கள் தேவையற்றவை! நீட் விலக்கு சட்டம் தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. எந்த அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை!

 மீண்டும் அனுப்ப வேண்டும்

மீண்டும் அனுப்ப வேண்டும்

நீட் விலக்கு சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தால், நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துகள், தமிழ்நாடு நீட் விலக்கு சட்டத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. அதனால், நீட்விலக்கு சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்குத் தான் ஆளுநர் அனுப்பியிருக்க வேண்டும்! நீட் விலக்கு சட்டம் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், இனியும் சர்ச்சைகளும், தாமதங்களும் ஏற்படுவதைத் தடுக்க, சட்டப்பேரவையை அவசரமாகக் கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியே சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்!

 குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர்

திருப்பி அனுப்பப்படும் நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்!" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சீமான் அறிக்கை

சீமான் அறிக்கை

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்விலிருந்து விலக்கு தரக்கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டவரைவுக்கு ஒப்புதல் தரமறுத்து திருப்பியனுப்பிய தமிழக ஆளுநரின் செயல்பாடு பேரதிர்ச்சியளிக்கிறது. எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைக்கோரிக்கையாக தமிழகச்சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குகோரும் சட்டவரைவை அங்கீகரிக்க மறுத்த ஆளுநரின் முடிவு பெரும் சனநாயகப்படுகொலையாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு மதிப்பளிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. மாநிலத்தன்னாட்சிக்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும், இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்திற்குமெதிரான நீட் எனும் ஒற்றைத்தகுதித் தேர்விலிருந்து விலக்குகோரி, ஒட்டுமொத்த தமிழகமும் ஒற்றைப் பெருங்குரலெடுத்து போராடி வரும் நிலையில் ஆளுநரின் அறிவிப்பு தமிழர்களின் தன்மானத்தையும், இனமானத்தையும் உரசிப்பார்ப்பதாக உள்ளது. தமிழக அமைச்சரவையின் முடிவைக் கேலிக்கூத்தாக்கிய ஆளுநரின் நடவடிக்கைக்கு எவ்விதக் காத்திரமான எதிர்வினையையும் ஆற்றாது ஒத்திசைந்து சென்றதன் விளைவே, இதுபோன்ற அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடக்காரணமாக அமைகிறது என்பதை மாநில அரசு இத்தருணத்தில் உணர வேண்டியது அவசியமாகிறது.

சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல்தர மறுத்துத் திருப்பியனுப்பும் பட்சத்தில், இரண்டாவது முறையாக சட்டவரைவை இயற்றும்போது அதனை நிராகரித்து திருப்பியனுப்ப முடியாது எனும் சட்டவிதியைச் சாதகமாக்க, மீண்டும் விலக்குகோரி தமிழகச் சட்டமன்றத்தில் சட்டவரைவை இயற்ற வேண்டுமெனவும், நீட் தேர்வு என்பதை மாணவர்களின் கல்வி தொடர்பானச் சிக்கல் எனச் சுருங்கப்பாராது, மாநிலத்தின் இறையாண்மைக்குவிடப்பட்ட சவாலெனக் கருதி, நாடு தழுவிய அளவில் பெரும் அணிசேர்க்கையை செய்து, ஒன்றிய அரசுக்கு அரசியல் நெருக்கடியையும், அழுத்தத்தையும் தந்து, நீட் தேர்வு விலக்கைச் சாத்தியப்படுத்த வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+