எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவிற்கு ஆதரவு! ஆனால்.. கண்டிப்பாக இதனை செய்யனும்! அன்புமணி ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் எந்த நிபந்தனையும் இல்லாமல்
திமுகவிற்கு ஆதரவு அளிப்போம், அப்படி செய்யவில்லை என்றால் வீடு வீடாக செல்வோம், தெருத்தெருவாக செல்வோம், ஸ்டாலின் வன்னியர் விரோதி என வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம் எனவும், மானமுள்ள ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என அதிரடியாகக் கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்களை கடந்துவிட்ட நிலையிலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

anbumani ramadoss dmk pmk

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார். பின்னர் மேடையில் பேசிய அவர்,” உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் அதற்கு எந்த தடையும் கிடையாது. அதற்கான தரவுகளை சேகரித்து வழங்கலாம் என தெளிவாக கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி 1000 நாட்கள் ஆகிறது. ஆனால் திமுக அரசு தூங்கிக் கொண்டுள்ளது.
உள் ஒதுக்கீடு என்பது ஜாதி பிரச்சனை கிடையாது சமூக நீதிப் பிரச்சனை நேரா போனா நேரா போவோம்.தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது குடிசையில் வசிக்கிறார்கள். சாலை போடுவது, கொத்தனார் வேலை செய்வது உள்ளிட்ட அடிமட்ட வேலைகளை செய்து வருகிறார்கள் அவர்கள் படிப்பிலும் வேலையிலும் முன்னேற உள் ஒதுக்கீடு அவசியம்.


இவர்கள் படித்து மேலே வந்து விட்டால் உண்மை தெரிந்து விடும் நமக்கே வாக்களிக்க மாட்டார்கள் என திமுக சூழ்ச்சி செய்து வருகிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் எந்தெந்த ஜாதி எவ்வளவு உள்ளது என தெரிந்துவிடும் அதனால் இத்தனை சீட்டுகள் வேண்டும் என கேட்கும் என்ற பயம் திமுக அரசுக்கு உள்ளது. சமூக நீதி அடிப்படையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் எடுக்க தயங்குகிறது. திமுக அரசுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.

தமிழ்நாட்டில் இன்று வீட்டில் அம்பேத்கர் சிலை வைத்துள்ள ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்; தமிழகம் முழுவதும் 100 அம்பேத்கர் சிலைகளை திறந்தது மருத்துவர் ராமதாஸ். தமிழ்நாட்டில் காவல்துறையின் மிக உயரிய பொறுப்பில் 109 அதிகாரிகள் இருக்கிறார்கள்.அவர்களில் ஒரே ஒருவர்தான் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டில் 18 சதவீதம் உள்ள ஒரு சமுதாயத்தில் இருந்து ஒரே ஒருவர்தான் வந்துள்ளார் என்றால் இதுதான் சமூக நீதியா? தமிழ்நாட்டில் சுமார் 320 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள் ; இவர்களில் 53 பேர் துறை செயலாளராக இருக்கிறார்கள். இந்த 53 பேரில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் கிடையாது.

வன்னியர் சமுதாயத்தின் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் இந்த சமுதாயம் முன்னேறக்கூடாது கடைசி வரை இந்த சமுதாயம் குடிச்சு குடிச்சு நாசமாகவே போக வேண்டும்; அடிமையாக இருக்க வேண்டுமா? இட ஒதுக்கீட்டு கொடுக்க மாட்டீர்களா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். 1987 இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது 21 பேரை தியாகிகளை துப்பாக்கி வைத்து சுட்டார்களே; அன்னைக்கு ஒரு தலைவராவது வாய் திறந்து பேசினீர்களா? யாருமே கேட்கவில்லை. திமுகவை வாழ வைத்தது வட மாவட்டங்கள் தான்; வன்னியர்கள் தான் திமுகவிற்கு அதிக அளவில் வாக்களித்து திமுகவை வெற்றி பெற செய்தார்கள்.

துரைமுருகனுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கவில்லை. திமுகவில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறைக்கு சென்றவர் துரைமுருகன். இன்று திமுகவிலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார் துரைமுருகன். திமுக விற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கும் இன்னொரு துணை முதல்வர் பதவியாவது கொடுத்திருக்கலாமே? அவர் வன்னியர் சமுதாயத்தில் பிறந்ததால் துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. வேறு வழி இல்லாமல் திமுகவில் அவருக்கு இப்போது பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சுற்றி தற்போது வியாபாரிகள் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிசினஸ் தான் தெரியுமே தவிர நிர்வாகம் தெரியாது. அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, செந்தில் பாலாஜி இவர்களெல்லாம் வியாபாரிகள் இவர்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. செந்தில் பாலாஜி சுதந்திர போராட்டத்திற்காக 410 நாட்கள் சிறைக்கு சென்று வந்தாரா வந்தவுடனே நேரடியாக அமைச்சராக்கி விட்டனர். மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி தான் ஆக வேண்டும் என சமீபத்தில் நான் பாராளுமன்றத்திலும் பேசியுள்ளேன்.

திமுக வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல்
திமுகவிற்கு ஆதரவு அள்ளிப்போம். 15 விழுக்காடு கையெழுத்து போடுங்கள், நிபந்தனை வேண்டாம். சீட்டு கீட்டு எதுவும் வேண்டாம். அப்படி செய்யவில்லை என்றால், வீடு வீடாக செல்வோம் தெருத்தெருவாக செல்வோம். ஸ்டாலின் வன்னியர் விரோதி என வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம். மானமுள்ள ஒரு வன்னியர் கூட, திமுகவிற்கு வாக்களிக்க மாட்டான்” என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+