வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! முதலமைச்சர் ஸ்டாலினிடம் அன்புமணி வைத்த முக்கிய டிமாண்ட்!
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக ஸ்டாலினிடம் அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை.
சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முக்கிய டிமாண்ட் ஒன்றை வைத்திருக்கிறார்.
பாமகவின் இந்த டிமாண்ட் மட்டும் நிறைவேறினால் திமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்புமுனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதனிடையே வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

வன்னியர் உள் இட ஒதுக்கீடு
"வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரை கூட்டாக இன்று சந்தித்தோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கான 10.5 சீர் மரபினருக்கு 2.5, இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு 7 விழுக்காடு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் உருவாக்கியது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
அதன்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூன்று மாதத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதை விரைவுபடுத்தி இந்தக் கல்வியாண்டுக்குள் வன்னியர் உள் ஒதுக்கீட்பை வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம்.வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கு முன்பாக வன்னியர் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

தலித் மற்றும் வன்னியர்
தமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினர் 40 விழுக்காடு இருக்கின்றனர். இரண்டு சமூகமும் பின் தங்கியுள்ளது. இரண்டு சமூகமும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது , சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது.

7 காரணங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்தபோது 7 காரணங்களை சொன்னது. அதில் 6 காரணங்கள் தவறு என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை சரிபார்த்து , இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற காரணம் மட்டுமே சரியானது. சாதிவாரியாக அனைத்து சமூகத்தினரும் அரசுப் பணிகளில் எத்தனை விழுக்காடு இருக்கின்றனர் என்ற தரவுகள் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு கிடைக்காது. ஆனால் தமிழக அரசு நினைத்தால் 2 அல்லது நாட்களில் அந்த தரவுகளை எடுத்து விடலாம்.

அதிமுக முறையாக நிறைவேற்றியது
அதிமுக முறையாகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றியது. வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். காவல்துறை அனுமதி வழங்கினால் சித்திரை முழு நிலவு விழா நடைபெறும்.
நாடகக் காதல் தொடர்பாக இப்போது பேச நான் விரும்பவில்லை. வன்னியர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கும் ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.''












Click it and Unblock the Notifications