பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை.. நானும் 3 பொண்ண பெத்தவன்! ஆதங்கத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்
சென்னை: என்றைக்கு ஸ்டாலின் முதலமைச்சர் ஆனாரோ அன்றிலிருந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். எங்கெங்கோ இதுபோன்று நடக்கிறது. இது நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம். நானும் மூன்று பெண் பிள்ளைகளை பெற்றுள்ளேன். அதனால்தான் எனக்கு இந்த ஆதங்கம் உள்ளது எனக் கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி, சீர்காழி தொகுதி அதிமுக வேட்பாளர் சக்தி ஆகியோரை ஆதரித்து மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்," தமிழ்நாட்டின் முதன்மை பிரச்சனை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததுதான். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 44,000 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 2100 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அன்புமணி ராமதாஸ்
குழந்தைகளுக்கு எதிராக 62000 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. கிருஷ்ணகிரி, விளாத்திகுளம் என அனைத்து ஊர்களிலும் பாலியல் குற்றங்கள் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை 12 முதலமைச்சர்கள் ஆட்சி செய்துள்ள நிலையில், அவர்களது ஆட்சிகாலங்களில் ஒரு குழந்தை கூட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படவில்லை. என்றைக்கு ஸ்டாலின் முதலமைச்சர் ஆனாரோ அன்றிலிருந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். எங்கெங்கோ இதுபோன்று நடக்கிறது. இது நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்.
பெண்கள் பாதுகாப்பு
நானும் மூன்று பெண் பிள்ளைகளை பெற்றுள்ளேன். அதனால்தான் எனக்கு இந்த ஆதங்கம் உள்ளது. திமுக ஆட்சியை உதறி எறிய வேண்டும். மூன்று நாளைக்கு முன்பு கருப்பு சட்டை போட்டுக்கொண்டு முதலமைச்சர் மத்திய அரசின் சட்ட மசோதாவை தீயிட்டு எரித்தார். இது ஒரு தேச துரோக குற்றம், அவரை ஜெயிலில் போட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 40 எம்பிக்களும் பெண்களுக்கு முன்னேற்றம் வரக்கூடாது என மகளிர் இடஒதுக்கீடு மசோதவை எதிர்த்து வாக்களித்தனர்.
முக ஸ்டாலின்
சட்ட மசோதா தோல்வி அடைந்த பிறகு முதலமைச்சர் பட்டாசு வெடித்து கொண்டாடினார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெண் கூட உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம் என கூறினார். ஸ்டாலினுக்கு அவரது தங்கச்சி மட்டும் தான் எம்பியா? உழைக்கும் மக்கள் பாமர மக்கள் எம்பி ஆகக்கூடாது என முதலமைச்சர் நினைக்கிறார்.
டெல்டா பகுதி
முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா பகுதிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொள்ளையடிக்க நினைக்கிறார். சமீபத்தில் டெல்டா வந்தவுடன் டெல்டாகாரன் என தெரிவித்தார். உங்களுக்கும் விவசாயிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. எந்த சம்பந்தமும் கிடையாது. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு குவிண்டால் எவ்வளவு என்று தெரியுமா? 40 கிலோ மூட்டைக்கு 60, 70 ரூபாய் வரை லஞ்சம் வாங்குகிறார்கள். 275 ரூபாய் ஒரு குவின்டாலுக்கு இந்த படுபாவிகள் கொள்ளையடிக்கிறார்கள்.
பிரதமர் மோடி
இந்தப் பணம் அனைத்தும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு செல்கிறது. ஒரு குவிண்டாலுக்கு 2500 ரூபாய் நாங்கள் தருகிறோம் என ஸ்டாலின் பேசினார். பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு 2368 ரூபாய் கொடுக்கிறார். இதில் திமுக அரசின் பங்களிப்பு வெறும் 131 ரூபாய் மட்டும் தான். திமுக காரன் நெற்றியில் காசு இருந்தால் கூட பிடுங்கி விடுவான். விவசாயிகள் மீது எவ்வளவு வன்மம்; அவருக்கு உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்துட்ட பிறகு குவிண்டாலுக்கு ரூ.3500 வழங்கப்படும்.
பிரேமலதா
திருமாவளவனுக்கு திமுகவில் ஒரு துளியும் மரியாதை இல்லை. பத்தாண்டுகளாக திமுக கூட்டணியில் உள்ளார். தற்போதுதான் அவருக்கு எட்டு சீட்டுகள் தருகிறார்கள். ஆனால் நேற்று வந்த பிரேமலதாவிற்கு 10 தொகுதிகள். விஜயகாந்த் அயோக்கிய திமுகவை ஒழிக்க வேண்டும் என கட்சியை தொடங்கினார். அப்படிப்பட்ட எதிரி கட்சியிடம் பிரேமலதா சேர்ந்துள்ளார்" என தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications