வெளியே வா.. வேலையை பாரு.. மகன் அன்புமணிக்கு.. அப்பா ராமதாஸ் வைக்கும் பெரிய ஆப்பு.. போச்சு!
சென்னை: பாமகவின் இளைஞர் அணித் தலைவராக தனது மகள் வழிப் பேரன் முகுந்தன் பரசுராமனை சில மாதங்களுக்கு முன்பு நியமித்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். தற்போது இதில் புதிய அதிரடி ஆக்சனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார் ராமதாஸ்.
ராமதாஸ் எடுத்துள்ள இந்த முடிவால்.. அன்புமணி தரப்பும் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. தைலாபுரம் தோட்டம் மிக காட்டமாக இருக்கிறது. மகன் அன்புமணிக்கு எதிராகவும், கட்சி இன்னும் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும், தமிழகத்தின் பால்தாக்கரே நான் தான் என்றும் நிருபிக்கும் வகையில் தான் டாக்டர் ராமதாசின் ஆக்சன்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன.

பாமகவின் இளைஞர் அணித் தலைவராக தனது மகள் வழிப் பேரன் முகுந்தன் பரசுராமனை சில மாதங்களுக்கு முன்பு நியமித்தார். இந்த நியமனத்தின் மூலம் ராமதாஸ்-அன்புமணிக்கு இடையே மோதல் வெடித்தது. அப்பா-மகனுக்கிடையேயான இந்த மோதலால், இளைஞரணி தொடர்பான பணிகளை கவனிக்காமலும், கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமலும் இருந்து வந்தார் முகுந்தன்.
மோதல் உச்சம்
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று முன் தினம் முகுந்தனை வரவழைத்த ராமதாஸ், "இனியும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது. நீ தான் இளைஞரணிக்குத் தலைவர். அதனால் கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்ட வேண்டும். நாளைக்கு (25/05/25) மாவீரன் குருவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள். அவரை வணங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இளைஞரணியின் வேலைகளைப் பார் " என்று அட்வைஸ் செய்திருக்கிறார் ராமதாஸ்.
இதனையடுத்து, திண்டிவனத்தில் உள்ள பாமக அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரியில் உள்ள குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முகுந்தன். பிறகு விழுப்புரத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். வெளிப்படையான அரசியலுக்கு வந்துள்ள முகுந்தனை கண்டு அன்புமணி ஆதரவாளர்களிடம் குமுறல்கள் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
நீக்க முடிவு
சமீபத்தில் கூட ராமதாஸ் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், அணித்தலைவர்கள் என கட்சியின் அனைத்துக் கட்டமைப்பிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தினார்.
ஆனால், இந்த கூட்டங்களில் 15 சதவீத ஆட்களே தோட்டத்திற்கு சென்றனர். மீதமுள்ள 85 சதவீத நிர்வாகிகள் அன்புமணியின் பின்னால் திரண்டனர். அவர் உருவாக்கிய சென்னை அலுவலகத்தில் திரண்டார்கள். தோட்டத்துக்குச் சென்ற 15 சதவீத ஆட்களிலும் 5 சதவீத ஆட்கள் அன்புமணியின் ஆட்கள் தான். தோட்டத்தில் என்ன நடக்கிறது ? ராமதாசின் திட்டம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் பொறுட்டே தனது ஆட்களை தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் அன்புமணி.
நான் அழைப்புவிடுத்தும் 85 சதவீத நிர்வாகிகள், கூட்டத்தை புறக்கணித்ததை டாக்டர் ராமதாசால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் நேற்று இரவு தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினரிடம் ஏகத்துக்கும் கொந்தளித்திருக்கிறார். அப்போது ஜிகே மணி, வடிவேல் ராவணன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களும் அங்கு இருந்துள்ளனர். அப்போது, எனக்கே அரசியல் பாடம் நடத்துகிறானா? (அன்புமணி) அவனுக்கு நான் யார் என்று காட்டுகிறேன் என்று ஆவேசப்பட்ட டாக்டர் ராமதாஸ், அவனையும் கூட்டத்துக்கு வராத அத்தனை நிர்வாகிகளையும் கட்சியிலிருந்து நீக்கு கிறேன் ; அதற்கான கடிதத்தை ரெடி செய்யுங்கள் என்று ஜிகே மணிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications