இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி.. ராமதாஸ் எதிர்ப்புக்கு மத்தியில் திட்டமிட்டபடி பயணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை இன்று தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இந்த பயணத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், திட்டமிட்டபடி பயணம் இன்று தொடங்கும் என அன்புமணி தரப்பு கூறி வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளின் ஆதரவை திரட்டி வருகிறார் அன்புமணி.

Anbumani ramadoss Ramadoss PMK

இதற்கிடையே அன்புமணி தன்னுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் அன்புமணி தொடர்ந்து தனது பெயரில் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி பூம்புகாரில் நடக்க உள்ள மகளிர் மாநாட்டுக்கான வேலைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தொண்டர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி, ராமதாஸின் பிறந்த நாளான இன்று (ஜூலை 25) முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது. மிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக 100 நாட்கள் நீண்ட தூரம் பயணிக்கும் இந்தப் பயணம், வரும் நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக ' உரிமை மீட்க... தலைமுறை காக்க' என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த லோகோவை அன்புமணி நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாமகவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே அன்புமணியின் நடைபயணத்தால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணியின் பயணத்திற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ட்சியின் நிறுவனரின் அனுமதி இல்லாமல், கட்சி கொடி, மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்கும் பிரச்சாரப் பயணத்தை அன்புமணி ராமதாஸ் மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார் ராமதாஸ்.

ராமதாஸ் தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி பயணம் இன்று தொடங்கும் என அன்புமணி ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த திருப்போரூரில் திட்டமிட்டபடி அன்புமணியின் சுற்றுப்பயணம் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+