செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதிய திட்டம்.. 6 மாதங்களுக்கு பிறகு விழித்த குழு.. அரசுக்கு பறந்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்களுக்கு தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதிய திட்டம் குறித்த கருத்துக்களை வழங்குவதற்கு அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு ககன்தீப் சிங் பேடி குழு விழித்துக் கொண்டதாகவும், செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கூடுதல் தலைமை செயலர் ககன்திப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு தற்போது அரசு ஊழியர்களை சந்தித்து ஓய்வூதியம் குறித்த ஆலோசனைகளை பெற இருக்கிறது.

இதற்காக வரும் 18 மற்றும் 25ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 1 மற்றும் 8ஆம் தேதியும் பல்வேறு அரசு துறை ஊழியர்கள் சங்கங்களை சந்தித்து பேச இருக்கிறது. இதை அடுத்து அரசு ஊழியர்கள் சங்கங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government Old Pension Scheme Anbumani Ramadoss

பழைய ஓய்வூதிய திட்டம்

மேலும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு வணிகவரி துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு துறை ஓட்டுநர்கள் சங்கம், பணி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் சங்கம், அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ககன்தீப் சிங் பேடி

இந்நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு ககன்தீப் சிங் பேடி குழு விழித்துக் கொண்டதாகவும், செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு வரும் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

தமிழக அரசு

பிப்ரவரி 4-ஆம் தேதி அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த குழு, இப்போதாவது விழித்துக் கொண்டு பணி செய்ய தொடங்கவிருப்பது மனநிறைவளிக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ககன்தீப் சிங் பேடி குழு அமைக்கப்பட்டும் கூட, அக்குழு அதன் பணிகளை தொடங்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அன்புமணி ராமதாஸ்

மேலும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத் தான் அரசு விழித்துக் கொண்டு ககன்தீப் சிங் பேடி குழு கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தும் என்று அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி ஆகும்.

கருத்துக் கேட்புக் கூட்டங்கள்

கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அடுத்த மாதம் 9-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசுத் தரப்பில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வுப் பணிகளையும் முடித்து செப்டம்பர் மாத மத்திக்குள் ககன்தீப் சிங் பேடி குழு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+