அன்புமணி ஒன்னாம் நம்பர் சோம்பேறி.. புடவை எடுக்க ABC பிளான் போடும் சௌமியா! போட்டு தாக்கிய ஸ்ரீகாந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீகாந்தி ராமதாஸ், தந்தை ராமதாஸின் நிழலாகவே இருந்து வருகிறார்.. பாட்டாளி மக்கள் கட்சிக்குள் வெடித்துள்ள குடும்பப் பூசல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. கட்சியின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது அண்ணன் அன்புமணி மற்றும் அண்ணி சௌமியா அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.. இது மீண்டும் பாமகவுக்குள் பதற்றத்தை கிளப்பியுள்ளது.

ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி தனது அண்ணன் அன்புமணி ராமதாஸ் மீது மிகவும் அதிரடியான மற்றும் கடுமையான புகார்களை தொடர்ந்து முன்வைத்து வ்ருகிறார்..

Anbumani

நேற்று முன்தினம் காந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, ""அன்புமணி தான் முதல் துரோகி, என் அப்பாவின் சொத்து, கட்சி என அனைத்தையும் திருடிவிட்டார். நிறைய சொல்வதற்கு உள்ளது. குடும்பத்தை பற்றி நிறைய சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். இவர் 2 நாள் மருத்துவமனையில் இருந்தார். அவரை வந்து என் உடன் பிறந்தவர் வந்து பார்க்கவில்லை. அவர் பிறந்தநாளுக்குகூட வரவில்லை.

சொத்துக்களை திருடிட்டாரு

நாங்கள் அப்பாவை பிரசாரத்திற்கு போகக்கூடாது என்று தான் சொன்னோம். அதையும் மீறி சென்றார். அங்குதான் மயக்கம்போட்டு ஆம்புலன்சில் ஏற்றி சென்றோம். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். ஆனால் இதுவரை அன்புமணி வந்து பார்க்கவில்லை. அவருக்கு எதாவது ஒன்னு ஆச்சுன்னா உங்களை தொலைத்துவிடுவேன். யாரு நீங்கள் எல்லாம்.

அவரின் உழைப்பில் வளர்ந்தவர்கள் நீங்கள் எல்லோரும். அப்பா மீது எந்தவித குற்றச்சாட்டும் சொல்லமுடியாது. ஒரு அக்கா கூட என்று பாராமல் என்னை கேவலமாக பேசுகிறார்கள். என் அப்பாவை இந்த வயதில் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் யாரும் அதை செய்யவில்லை என்று சரமாரியாக பேசியிருந்தார்.

அன்புமணி சோம்பேறி

இந்நிலையில் மீண்டும் அன்புமணி மற்றும் சவுமியா அன்புமணி மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் காந்தி ராமதாஸ்.. அரசியலுக்கு வரும் விருப்பம் தனக்கு இல்லை என்றாலும், அப்பாவைத் தனிமைப்படுத்த அன்புமணி தரப்பு திட்டமிட்டதாலேயே அவருக்குத் துணையாக தான் களமிறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்..

"அன்புமணி ஒரு ஒன்னாம் நம்பர் சோம்பேறி, மந்திரி பதவி முடிந்த பிறகு 3 ஆண்டுகளாக யாரையும் சந்திக்காமல் வீட்டிலேயே உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தார்.. கட்சியின் தொண்டர்கள் அவரைச் சந்திப்பதே கடினம். மக்களின் கஷ்டங்களை அறிய கிராமங்களுக்குச் செல்ல அவர் விரும்புவதில்லை.

சௌமியா ABC பிளான்

இப்போதுள்ள விரிசலுக்கு முழு காரணமும் சௌமியா அன்புமணி தான்.. ஒரு கல்யாணத்துக்குப் புடவை எடுக்கச் சென்றால் கூட பிளான் A B C என 3 திட்டங்களைப் போடுவார். எம்.பி, எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற ஆசைக்காகவே 'பசுமைத் தாயகம்', 'மக்கள் தொலைக்காட்சி' என ஒவ்வொன்றாகப் பிடுங்கிக்கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் போட்ட சதித் திட்டம் தனது முதுகில் குத்தும் வரை தெரியவில்லை.

அன்புமணிக்கு, அப்பா எப்போது ஓய்வு பெறுவார் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.. பதவி மற்றும் பண ஆசைக்காகவே அவர்கள் செய்கிறார்கள். அப்பா மயக்கமடைந்து மருத்துவமனையில் இருந்தபோது கூட 30 கி.மீ தூரத்தில் இருந்தும் அவர்கள் வந்து பார்க்கவில்லை இப்போது ஓட்டுக்காக 10 நிமிடம் வீடியோவுக்காக கேமராக்களுடன் வந்து நாடகமாடுகிறார்கள்.

தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து கட்சியைப் பறித்துக் கொண்டார்கள். அப்பாவை மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர்கள் வதைக்கிறார்கள்.. 90 சதவீத நிர்வாகிகள் தன்னிடம் இருப்பதாக அன்புமணி கூறுவது பொய்.. இப்போது அப்பா ராமதாஸ் சுயமாக 108 மாவட்டச் செயலாளர்களை நியமித்து கட்சியை மீண்டும் கட்டி எழுப்பி வருகிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+