பூர்வீக சொத்துகளை தேடி கண்டுபிடிக்கணுமா? சொத்து வாங்கும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
சென்னை: ஒரு சொத்தை வாங்கும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும், கவனிக்க வேண்டிய விஷயத்தையும் அறிந்து கொள்வது அவசியம்.. அதேபோல பூர்வீக சொத்துக்களை தேடி கண்டுபிடிப்பதில் உள்ள நடைமுறைகள் என்னென்ன? என்பதையும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.. இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஒரு சொத்தை வாங்கும் முன்பு அந்த சொத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதையும், அந்த சொத்து அவருக்கு எவ்வாறு வந்தது என்பதும் அறிய வேண்டிய ஒன்று..

விற்பனை பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், எங்கும்பரன்ஸ் சான்று போன்ற அனைத்து சட்ட ஆவணங்களும் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்ப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அந்த சொத்து தொடர்பாக வழக்கு, உரிமை கோரல் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.
பூர்வீகச் சொத்து
குடும்ப சொத்து என்றால், அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உரிமை இருக்க வாய்ப்பு உள்ளது.. நீண்ட காலமாக வீட்டைவிட்டு பிரிந்து வாழ்கிற உறவினர்கள், தொடர்பு இல்லாமல் இருந்தாலும் கூட, சட்டப்படி அந்த சொத்தில் பங்கு வைத்திருக்கலாம்.
அவர்கள் சம்மதம் இல்லாமல் சொத்தை வாங்கினால், பிறகு அவர்கள் உரிமை கோரி கோர்ட்டை நாடும் சூழலும் வரக்கூடும்.. முக்கியமாக திருமணமான பெண்கள் குடும்பத்தை விட்டு சென்றிருந்தாலும், தந்தை வழி சொத்துகளில் அவர்களுக்கு சட்டப்படி உரிமை இருக்க முடியும். அவர்களின் ஒப்புதல் இல்லாமல் சொத்து விற்கப்பட்டால், அது சட்ட சிக்கலாக மாறும்.
அதேபோல மைனர் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்துகள் அல்லது அவர்களுக்கு பங்கு உள்ள சொத்துகள் வாங்கும் விஷயத்தில் அதிக கவனம் தேவை.
மைனருக்கு உயில், செட்டில்மென்ட் பத்திரம்
குழந்தை சிறுவயதில் இருக்கும்போது, கார்டியன் மூலம் சொத்து விற்கப்பட்டிருந்தாலும், அந்த குழந்தை 18 வயதை கடந்த பிறகு அந்த விற்பனைக்கு எதிராக வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. அதனால், நீதிமன்ற அனுமதி பெற்ற விற்பனைதானா என்பதை உறுதி செய்யாமல் இப்படிப்பட்ட சொத்துகளை வாங்குவது பாதுகாப்பானது கிடையாது என்று வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்..
அதேபோல குடும்பங்களில் மூத்தவர்கள் பல இடங்களில் நிலம், வீடு போன்ற சொத்துகளை வைத்திருப்பார்கள். அவற்றை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க உயில் அல்லது செட்டில்மென்ட் பத்திரம் எழுதியிருந்தாலும், நடைமுறையில் அந்த சொத்துகள் அனைத்தும் வாரிசுகளின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்காது. குறிப்பாக, வெளியூர்களில் உள்ள சொத்துகள் தொடர்பாக உரிமை கோருவதில் அதிக சிக்கல்கள் உருவாகும்.
பல சமயங்களில் அந்த சொத்துகளுக்கான பத்திரங்கள் மட்டும் பெரியவர்கள் பெயரிலேயே இருந்து, உரிமை மாற்றம் நடைபெறாமல் இருக்கும். பெரிய குடும்பங்களில் இவ்வாறு உள்ள சொத்துகளை ஒருங்கிணைத்து வாரிசுகளுக்கு மாற்றுவது கடினமானதாகும். குடும்ப உறவுகள் சரியில்லாத நிலையிலும், பெற்றோர் அல்லது மூத்தவர்கள் மூதாதையர் சொத்தை வாரிசுகள் பெறுவதை சட்டப்படி முழுமையாக தடுக்க முடியாது.
பூர்வீக சொத்தை தேடி கண்டுபிடிப்பது
இத்தகைய சூழலில், பூர்வீக சொத்துகளை நில அபகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பதும், மீட்டெடுப்பதும் வாரிசுகளுக்கு பெரிய சவாலாக மாறிவிடும்.. வெறும் பத்திரம் மட்டும் கையில் வைத்துக் கொண்டு, அந்த சொத்து எங்கு உள்ளது, அதன் எல்லைகள் என்ன என்பதை கண்டுபிடிப்பதும் பலனை தராது..
இதற்கு அந்தந்த பகுதி வருவாய் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது. மேலும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களில் அக்கம் பக்கத்தினர் அத்துமீறி நுழைந்திருக்கலாம். சிலர் தங்கள் பத்திரங்களில் அந்த நிலத்தின் ஒரு பகுதியை சேர்த்து மோசடி செய்திருக்க வாய்ப்பும் உள்ளது. சில சந்தர்ப்பங்களில், அது பிறர் நிலம் என்பதே தெரியாமல், கட்டிடங்கள் கூட கட்டப்பட்டிருக்கலாம்.
தாத்தா வழி சொத்துக்கள்
இப்படியான பிரச்சனைகள் ஏற்பட்டால், சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை வழக்கறிஞரின் ஆலோசனையுடன் தெரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்... அவசர நடவடிக்கைகள் இறங்கி, அது புதிய சிக்கல்களை உருவாக்கிவிடக் கூடாது..
தந்தை அல்லது தாத்தா வழியாக கிடைத்த சொத்துகள் என்றால், அவற்றுக்கு தனியான வாரிசுச் சட்ட விதிமுறைகள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
குடும்பத்தினர் யாரும் வசிக்காத ஊர்களில் உள்ள பூர்வீக சொத்துகளை மீட்க முயன்றால், நடைமுறையில் பல தடைகள் எதிர்கொள்ள நேரிடும். எத்தகைய சிக்கல்கள், யார் மூலம் வந்தாலும், பொறுமையுடன் அணுகி சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதுதான் சரியான வழி என்று வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்..
பரம்பரை சொத்து - மகனுக்கு உரிமை
பரம்பரை சொத்துகளை விற்கும் விஷயத்திலும் பொறுமை அவசியம்.. இந்தியாவில் பரம்பரை சொத்து விற்பனைக்கு தொடர்பான சட்டங்களையும் வரி விதிகளையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
பரம்பரை சொத்து என்றால், மகனுக்கு பிறப்பிலேயே அந்த சொத்தில் உரிமை உண்டு. அவர் குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தாலும் அல்லது பெயரளவில் வாரிசாக சேர்க்கப்படவில்லை என்றாலும், அந்த சொத்தின் மீது அவர் உரிமை கோருவது சட்டப்படி செல்லுபடியாகும்...!!
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications