நடுங்க வைத்த ஆந்திர ரயில் விபத்து.. மோடி, ஜெகன் மோகன் ரெட்டி, அஸ்வினி வைஷ்ணவ் தனித்தனியே நிவாரணம்
சென்னை: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி 8 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ள நிலையில் ஆந்திர மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி அருகே சென்றது.

அப்போது திடீரென்று பிரேக்கில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி இன்னொரு பயணிகள் ரயில் வந்தது.
இந்த ரயில் தண்டவாளத்தில் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். 8 பேர் பலியான நிலையில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ரயில்வே விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆந்திர மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு சார்பில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரணம் அறிவித்துள்ளார். அதில் ரயில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சமும், பிற மாநிலத்தை சேர்ந்தவர் பலியாகி இருந்தால் ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளதாக அவரது அலுவலக எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications