ஆந்திரா டூ தமிழ்நாடு.. பிரியாவை விரட்டி விரட்டி காதலித்த இளைஞர்.. 6 இடங்களில் குத்தி படுகொலை!
இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்
சென்னை: ஆந்திரா டூ தமிழ்நாடு வரை.. பிரியாவை விரட்டி விரட்டி வந்து காதலித்தார் இளைஞர்.. இறுதியில் காதலை ஏற்க மறுத்த பிரியாவை 6 இடங்களில் குத்தி கொலை செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார்.. இவர்களது மகள் பிரியா.. 17 வயதாகிறது.

ஆந்திராவில் பள்ளியில் படித்தபோது, பிரியாவை துர்காராவ் என்பவர் காதலித்துள்ளார்.. ஒரு தலைக்காதல் இது.. பிரியாவிடம் தன் காதலை சொல்லியபோது, அதனை அவர் ஏற்று கொள்ளவில்லை. ஆனாலும் பிரியா ஸ்கூல் போகும்போதெல்லாம் துர்காராம் பின்னாடியே விரட்டி விரட்டி சென்று காதலித்துள்ளார்.
இதன்பிறகு பிரியா குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பி பட்டிபுலம் வந்து வீடு எடுத்து தங்கினர்.. உடனே துர்காராமும் பின்னாடியே 6 மாசத்துக்கு சென்னை வந்துவிட்டார்.. எப்படியாவது பிரியா மனசில் இடம் பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதற்காக பிரியாவின் அப்பாவிடமே போய் கொத்தனார் வேலைக்கு சேர்ந்தார். ஒரே ஊர் என்பதால் தனது கணவரிடம் பேசி பிரியாவின் தாயார் வேலைக்கு சிபாரிசு செய்தார்.. ஆரம்பத்தில் ஒழுக்கமாக இருந்த துர்காராம், நாள் ஆக, ஆக பிரியாவிடம் திரும்பவும் வேலை காட்டினார்.. லவ் டார்ச்சர் ஆரம்பமானது.. நேற்றுகூட பிரியாவிடம் லவ்வை ஏற்றுகொள்ளும்படி சொல்ல, அதற்கு மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துர்காராம், மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவை வயிறு, நெஞ்சு பகுதியில் 6 இடங்களில் குத்தினார்.. இதில் பிரியா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. குடும்பத்தினர் கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும் பிரியாவை காப்பாற்ற முடியவில்லை.. தப்பியோடிய துர்காராமை மாமல்லபுரம் அருகே கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications