Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு விஷ ஊசி போட்டு கொல்லுங்க.. புற்றுநோயின் கொடுமையால் துடிக்கும் அங்காடி தெரு நடிகை சிந்து

என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என மருத்துவர்களிடம் கேட்டுள்ளேன். அந்த அளவுக்கு எனது புற்றுநோய் தீவிர பாதிப்பையும் வலியையும் கொடுக்கிறது- அங்காடி தெரு சிந்து.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புற்றுநோயால் நாள்தோறும் வலி வேதனையால் துடித்து வரும் அங்காடித் தெரு நடிகை சிந்து தன்னை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என கதறி அழுதுள்ளார்.

அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமானவர் சிந்து. இவர் படித்துரை பாண்டிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அது போல் சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது கேன்சர் நோய் தாக்கி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

இதுகுறித்து நடிகை அங்காடித் தெரு சிந்து ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2020ஆம் ஆண்டு எனக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டு மார்பகங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டன. அன்று முதல் ஆங்கில மருந்துகள், நாட்டு மருத்துவம் என எத்தனையோ வைத்தியம் பார்த்து வருகிறேன்.

35 நாட்கள்

35 நாட்கள்

ஆனாலும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை. எந்த மருத்துவத்தையும் நான் குறை சொல்லவில்லை. அவர்கள் நன்றாக ட்ரீட்மென்ட் செய்தார்கள். என் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. ஆங்கில மருந்துகள் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் சித்த மருத்துவம் செய்தேன். தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் 35 நாட்கள் தங்கியிருந்து நாட்டு மருந்து வைத்தியம் பார்த்தேன். அப்போது மார்பகத்தில் இருந்த புண்கள் ஆறின. நன்றாக இருந்தது ஆனால் எனது மருமகன் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். அதனால் நான் சிகிச்சையை தொடர முடியாத நிலை ஏற்பட்டு சென்னைக்கு திரும்பிவிட்டேன். முதல்முறை கேன்சர் வந்ததுமே என்னை 3 ஆண்டுகளுக்கு ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள்.

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

ஆனால் நான் உழைத்தால்தான் எனக்கு சாப்பாடு என்கிற போது நான் எப்படி ரெஸ்ட் எடுக்க முடியும் என்பதால் வேலை பார்த்தேன். எனக்கு நிறைய நண்பர்கள் உதவி செய்து காப்பாற்றி வருகிறார்கள். அவர்களால்தான் நான் உணவு உண்கிறேன், மற்ற செலவுகளை பார்த்துக் கொள்கிறேன். சரி எத்தனை நாளுக்குத்தான் அவர்களுக்கு பாரமாக இருப்பது என கருதி, நான் சீரியல் வாய்ப்புகளை மீண்டும் தேடினேன்.

உடல் வலி

உடல் வலி

எனக்கு கிடைத்தது. ஆனால் என்னால் இறுக்கமான உடைகளை போட்டு நடிக்க முடியாத அளவுக்கு என் உடல் வலி இருந்தது. ஒரு கையில் சீரியலுக்காக நகைகள் போட்டு போட்டு வலது கை வீங்கி அலர்ஜியாகிவிட்டது. இடது கை செயல்படவே இல்லை. என் மகளும் வேலை இல்லாமல் இருக்கிறார், அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருக்கிறது. அவர்களது ஜீவனத்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.

வலியால் துடிக்கும் சிந்து

வலியால் துடிக்கும் சிந்து

தினம் நான் வலியால் துடிக்கிறேன். என் தம்பியிடம் நான் தூங்கும்போது தலையணையால் அழுத்தி என்னை கொன்றுவிடு என்று கூட கூறியுள்ளேன். எனக்கு எந்த மருந்தும் கேட்கவில்லை. இதனால் எனக்கு முதலில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் போய் எனக்கு விஷ ஊசி போட்டு சாகடிச்சிடுங்க, தினம் தினம் சாவதற்கு பதில் ஒரேடியாக செத்துவிடுகிறேன் என்றும் அழுது கேட்டு பார்த்தேன். அப்போதுதான் அவர் சொன்னார், எனக்கு கேன்சர் எங்கே எல்லாம் பரவியுள்ளது என்பதை தெரிந்து கொள்ள பெட் ஸ்கேன் எடுக்க வேண்டும்.

மருந்து

மருந்து

அதில் ஒரு மருந்து போட்டு ஊசி போடுவார்கள். ஆனால் எனக்கு ஊசி போட்டதும் மருந்து உள்ளே போகாமல் கை வீங்கிவிடும். இதனால் இந்த சிகிச்சை எனக்கு எதுவுமே பலனளிக்கவில்லை. அப்போதுதான் அந்த டாக்டர் புற்றுநோயை கரைக்கும் மிஷின் ஒன்று உலகத்திலேயே 4 இடங்களில்தான் இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 4 இடங்களில் மட்டுமே இந்த மிஷின் இருக்கிறது.

பெங்களூரில் மட்டுமே சிகிச்சை

பெங்களூரில் மட்டுமே சிகிச்சை

அங்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாம். செல்வாக்கு இருந்தால் இலவசமாக கூட அந்த சிகிச்சையை செய்து கொள்ளலாமாம். இல்லாவிட்டால் ஒரு சிட்டிங்கிற்கு 5 ஆயிரம் வீதம் 25 சிட்டிங் எனக்கு செய்ய வேண்டும். அதற்கான செலவு, நான் தங்குவதற்கு சாப்பிடுவதற்கு என எல்லாவற்றுக்கும் பணம் தேவை. எனவே நான் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளேன். இந்த சிகிச்சை பெற அவரிடம் உதவி கேட்பேன். அது போல் என் மகளுக்கு ஒரு அரசு வேலை கொடுத்தால் , 27 வயதில் கணவரை இழந்துவிட்டு ஒரு வயது குழந்தையுடன் தவிக்கும் என் மகளுக்கு வாழ்வாதாரமாக அமையும். அதற்குள் இந்த பேட்டி முதல்வரின் கவனத்திற்கு சென்று எனக்கு உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். எனக்கு சின்னத்திரையில் இருந்துதான் உதவி வருகின்றன.

 3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

பெரிய திரையிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக உதவிகளே வருவதில்லை. அது போல் பொதுமக்களும் எனக்கு ஜிபே நம்பரில் உதவி செய்கிறார்கள். என் வலியை குறைத்து என் மகளுக்கு ஒரு வாழ்வு அளித்தால் எனக்கு அதுவே நிம்மதியாக இருக்கும். என் உடல் வலி, மன வலி, என் மகளின் கோலம், இவற்றையெல்லாம் கண்டு நான் இரவில் புழுவை போல் துடிக்கிறேன். நான் யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை.

சாப்பாட்டுக்கு வழியில்லை

சாப்பாட்டுக்கு வழியில்லை

எனக்கு ஏன் அந்த கடவுள் சோதனை கொடுக்கிறார் என தெரியவில்லை. வெளியே சொன்னால் வெட்கக் கேடு, சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறேன். என் தம்பி பிளாக் பாண்டித்தான் எனக்கு தேவையான உதவிகளை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட என் வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிக் கொடுத்தார். அது போல் நடிகை ஜெயலட்சுமியும் எனக்கு உதவுவார். நடிகை ஷகிலா ரூ 10 ஆயிரம் கொடுத்தார். அவரது நண்பர் ரூ 8000 கொடுத்தார். இப்படியாக எனக்கு சிறுக சிறுக உதவிகள் வருகின்றன. இவ்வாறு தினந்தோறும் தான்படும் சித்திரவதையை அங்காடி தெரு சிந்து கண்ணீர் மல்க தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+