வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள்
சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.ஆர்.ராஜாவுக்கு மீண்டும் சீட் வழங்காததை கண்டித்து முழக்கம் போட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயம் வந்த நேரத்தில், அவரை காரை நோக்கி வேட்பாளரை மாற்ற கோரி தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். நேற்றிரவு டி.ஆர்.பாலு வீட்டில் எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த நிலையில் இன்றும் வேட்பாளர் தேர்வு விவகாரம் தொடர்வது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னணி என்ன?
திமுக சார்பாக நேற்று கிருத்திகா தேவி தாம்பரம் வேட்பளராக அறிவிக்கப்பட்ட பின் திமுகவினர் டிஆர் பாலுவை முற்றுகையிட்டினர். எஸ்.ஆர். ராஜாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்டு சரமாரியாக அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாம்பரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகா தேவியும், அதிமுக சார்பில் சிட்லபாக்கம் சி. ராஜேந்திரனும் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இங்கே திமுகவின் எஸ்.ஆர். ராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தாம்பரத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
திமுக (DMK): டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி
அதிமுக (AIADMK): சிட்லபாக்கம் சி. ராஜேந்திரன்
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் செல்வி களமிறங்குகிறார். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய தொகுதியாகும்.
2021 தேர்தலில் திமுகவின் எஸ்.ஆர். ராஜா வெற்றி பெற்றிருந்தாலும், 2026 தேர்தலில் புதிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது எஸ்.ஆர். ராஜா வலுவாக உள்ள தொகுதி ஆகும். இங்கே 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வரிசையாக எஸ்.ஆர். ராஜா இங்கே வென்றுள்ளார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக புதியவரான கிருத்திகா தேவி இங்கே போட்டியிடுகிறார்.
திமுக மீது அப்செட்
நேற்று கிருத்திகா தேவி தாம்பரம் வேட்பளராக அறிவிக்கப்பட்ட பின் திமுகவினர் டிஆர் பாலு வீட்டை முற்றுகையிட்டனர். எஸ்.ஆர். ராஜாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்டு சரமாரியாக அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அண்ணே எப்படி அவருக்கு சீட் கொடுக்காமல் போனீங்க.. அவர் எவ்வளவு செஞ்சு இருக்காரு... ஏரியாவில் அவ்வளவு வேலைகளை செஞ்சிட்டு இருக்காரு.. அவருக்கு எப்படி சீட்டு கொடுக்காமல் போனீங்க..
அவருக்கு கொடுக்காமல் இப்படி புது முகத்துக்கு கொடுத்தால் எப்படி வெற்றிபெறுவார்கள்? யார் வாக்களிப்பார்கள்? கிருத்திகா தேவி யாருன்னு இங்கே யார்க்கும் தெரியாதே? அவருக்கு எப்படி சீட்டு கொடுத்தீங்க? ராஜா மக்களுக்கு அவ்வளவு பணிகளை செய்து இருக்கிறார். அவரை எப்படி நீக்கினீர்கள்? அவர் போட்ட கூட்டத்திற்கு எல்லாம் என்ன பயன்.. இதெல்லாம் தவறு அண்ணன், என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதை எல்லாம் டிஆர் பாலு அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்.
அருகிலேயே இருந்த எஸ். ஆர் ராஜாவும் இதை பெரிதாக கேள்வி கேட்கவில்லை . தனது ஆதரவாளர்களை அமைதிப்படுத்தவில்லை. மாறாக அவர் இதை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.
டிஆர் பாலு கோபம்
இதையடுத்து டிஆர் பாலு கோபம் அடைந்தார். அப்போது எங்களுக்கு தெரியாதா ராஜாவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று? உங்களுக்கு முன்பெல்லாம் ராஜாவை எனக்கு தெரியும். ராஜா சின்ன வயதில் இருந்தே எனக்கு தெரிந்த பையன். இப்போது அவருக்காக நீங்கள் எல்லாம் என்கிட்டயே அழுது சீன போடுறீயா? நான் என்ன கல்லா.
அவருக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியாதா? ஏன் சீட்டு கொடுக்கல.. எதுக்கு கொடுக்கலன்னு எங்களுக்கு தெரியாதா? ராஜா முதல்வர் ஸ்டாலினுக்கே நெருக்கம். ராஜாவிற்கு சீட்டு கொடுக்கவில்லை என்றால்.. அதற்கு காரணம் இல்லாமல் இருக்காதா? எல்லோருக்கும் முன்னாடி காரணத்தை சொல்லிட்டு இருக்க முடியுமா?, என்று டிஆர் பாலு கோபமாக பேசி அவர்களை சமாதானம் செய்தார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications