'அயோத்தி' தீர்ப்பு- உச்சநீதிமன்றத்துக்கு வந்தது யார்? நிர்மலா சீதாராமன் போட்டுடைத்த 'பகீர்' தகவல்!
சென்னை: அயோத்தி பாபர் மசூதி - ராமர் கோவில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட போது ஆஞ்சநேயரின் பின் தலைமுறை (குரங்குகள்) நீதிமன்றத்தின் மேல் இருந்தன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று "Maalyada: The Sacred Garland" புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம பேசியதாவது: நம்ம மூதாதையர்கள் சேர்ந்து பண்ணினது எல்லாம் சேர்ந்துதான் நமக்கு வருது. வரப் போகிற தலைமுறைகளுக்கு நாம புண்ணியம் பண்ணப் போகிறோமா? நல்லது பண்ண போகிறோமா? என்கிற உணர்ச்சியை முதலில் கொடுக்கனும்.

ராமாயணத்தை பற்றி, துளசிதாசரைப் பற்றி எல்லாம் பேசும் போது.. துளசிதார் அனுமார் அவதாரம் என்பார்கள். ஏன்? அதுல சொல்றது என்ன? அந்த வரியை இந்த புத்தகத்தில் ஆரம்பிக்கிறார்.. துளசிதாசருடைய அல்ல.. அந்த தத்துவத்தை.. "நான் வைகுண்டத்தில் இல்லை.. அங்க நான் இருக்க மாட்டேன். இல்ல வேற விதமான கோவில்களில் இருக்க மாட்டேன். எங்கே இருக்கிறேன் நான்? பக்தியோடு பகவன் நாமா சொல்ற இடத்தில் இருப்பேன். அதுதான் அனுமார்".
எங்க ராம ராம ராமன்னு சொல்றோமோ அங்க வந்துடுவார் அவரு.. ஆக்சுவலா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. இட் இஸ் வெரிபைட்.. அதனால சொல்றேன். அயோத்தியா வெர்டிக்ட் (அயோத்தி வழக்கு தீர்ப்பு) வந்த போது, அந்த ஜட்ஜ் கோர்ட்டில் சொல்லும் போது.. நீங்க வேணும்னா Fake- ஆ? இல்லையா?ன்னு டபுள் வெரிபை செய்து கொள்ளுங்க.. நீங்க பத்திரிகைகாரங்க.. ஆஞ்சநேயரோட பின் தலைமுறை.. கோர்ட் மேல உட்கார்ந்திருக்கிறதாம். நம்பனும்னா நம்புங்க.. இல்லைன்னா இல்லை.. இதென்ன இந்தம்மா இதை பேசுதுன்னா ஓ தாராளமா அதையும் சொல்லிக்கோங்க.. பட் பகவன் நாமா சொல்ற இடத்தில் ஆஞ்சநேயர் வருவார் என்பது நமக்கு ஆழ்ந்த நம்பிக்கை. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசினார்.












Click it and Unblock the Notifications