தொடங்கியது தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணை.. சென்னை அண்ணா பல்கலை மாணவியிடமும் விசாரிக்கிறது
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தாமாக விசாரணைக்கு எடுத்திருந்த நிலையில், இதன் விசாரணை இன்று துவங்க உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி மாணவர்கள், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் இந்த குழு இன்று விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. அத்துடன், சம்பவம் நடந்த இடத்தையும் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன்(37) என்ற நபரை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டங்கள்: இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தன.
இதனிடையே, அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கை விசாரிக்க, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டணம்: பொதுவெளியில், எப்ஐஆர் வெளியானதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை ஹைகோர்ட், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், கட்டணம் எதுவும் வசூலிக்காமல், மாணவி தன்னுடைய படிப்பை தொடர்ந்து முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பாலியல் வன்முறைக்கு உள்ளான மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இருவர் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரிக்க உள்ளனர்.
விசாரணை: இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரகத்கர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இந்த குழுவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பரிந்துரை: இந்நிலையில் மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர் டெல்லியிருந்து இன்று தமிழகம் வந்துள்ளனர். விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் வந்தனர்.
இன்று சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி மாணவர்கள், விசாரணை அதிகாரியான அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், குற்றவாளியை கைது செய்த போலீசார் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்த உள்ளனர். வழக்கு தொடர்பாக எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கைகளை தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications