இது சாதனை! அண்ணா பல்கலை. மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்கள்! பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
சென்னை: சென்னையில் நடைபெற்ற அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக பல்கலைக்கழகம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா நீண்ட நாட்களாக தள்ளிப்போனது. நீண்ட நாட்களாக மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கு பின் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.

ஆளுநர் ரவி இந்த நிகழ்விற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூட கல்வியாளர்கள் விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில் இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இன்று கிண்டி வளாகத்தில் காலை 10 முதல் 11.30 மணி வரை இந்த பட்டமளிப்பு விழா நடந்தது .
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் அஹமதாபாத் செல்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அண்ணா பல்கலை விழாவை தொடர்ந்து கிண்டி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் மோடி, ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு உரை நிகழ்த்துகிறார்கள். மொத்தம் 69 மாணவ, மாணவியருக்கு பிரதமர் மோடி இன்று பதக்கங்களை வழங்கினார். பல்வேறு கல்வியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நீங்கள் எல்லோரும் சாதனையாளர்கள். எதிர்கால இந்தியா குறித்த சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, இளைஞர்கள் நம் நாட்டை மாற்றி வருகிறார்கள். அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நம் நாட்டிற்கு பொருத்தமானவை. இங்கு பட்டம் பெறும் எல்லோரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் பெற்றோர்களை நான் பாராட்டுகிறேன்.
இளைஞர்கள் அனைவரும் கனவு காண வேண்டும். மாணவர்களுடன் ஆசிரியர்களுக்கும் இந்த நாள் மிக முக்கியமான நாள். ஆசிரியர்கள் என்பவர்கள் நாட்டின் நாளைய தலைவர்களை உருவாக்குபவர்கள். நமது நாட்டின் தொழில்துறை சர்வதேச நாடுகளில் முன்னணியில் உள்ளது. இந்திய இளைஞர்கள் இந்தியாவை மட்டுமின்றி நாட்டையே வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்கின்றனர்.
இங்கு பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. அதை நீங்கள் நினைவில் வைத்து இருக்க வேண்டும். இங்கு படித்து பட்டம் பெற்ற எல்லோரையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். அது இங்கு படித்த எல்லோருக்கும் கவுரவமான செய்தி. கொரோனா என்பது எதிர்பாராதது- நூற்றாண்டுக்கு ஒருமுறை உருவாக கூடியது. கொரோனா தொற்று ஒவ்வொரு நாட்டையும் சோதனைக்குள்ளாக்கி இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது. உலகின் 2-வது செல்போன் உற்பத்தியாளராக நமது நாடு உருவெத்துள்ளது. 6 ஆண்டுகளில் மட்டுமே 15,000% ஸ்டார்ட் அப்ஸ் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த உலகமே இந்திய இளைஞர்களை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவை உலக நாடுகள் நம்புகின்றன. இந்தியா கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது. இதுதான் இந்திய வரலாற்றில் மிக அதிகம். இந்தியா மீதும், இந்திய இளைஞர்கள் மீதும் உள்ள நம்பிக்கைதான் இதற்கு காரணம். நாம் வாழும் காலும் ஒரு அமிர்த காலம். நாட்டை நிர்மாணிப்பதில் மாணவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. தொழில்நுட்ப சிந்தனை, பயன்படுத்துவது, ஏற்றுக் கொள்வது என்பது தற்போதைய சகாப்தத்துக்கு முக்கியம், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications