உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பின்னடைவு! தமிழக மாணவர்களின் கனவு கல்லூரிக்கு இந்த நிலையா?
சென்னை: உலக அளவிலான தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் சிறந்த கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகம் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் சிறந்த பல்கலைக்கழகங்களை QS என்ற சர்வதேச அமைப்பு ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவின் 54 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் 383 ஆவது இடத்தில் இருந்து 465 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதாவது 82 இடங்களில் பின்தங்கி சென்றுள்ளது. ஐஐடி மெட்ராஸ், முதல் 200 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த பின்னடைவிற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. அதாவது துணை வேந்தர் நியமனத்தில் நிலவும் சிக்கலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இந்த துணைவேந்தர் நியமன பிரச்சினை நீண்டகாலமாகவே நீடித்து வருகிறது.
அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. அந்த பணியிடம் தற்போது ஆகஸ்ட் வந்தால் ஓராண்டாகவே காலியாக இருக்கிறது. புதிய துணைவேந்தர் இல்லாததால் பல்கலைக்கழகத்தின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் தலைச்சிறந்த பல்கலைக்கழகமாகும். இது 1978 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. முதன்மை வளாகம் சென்னை கிண்டியிலும், துணை வளாகம் குரோம்பேட்டையிலும் அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. இதையடுத்து 1982 ஆம் ஆண்டு முதல் "பேரறிஞர்", "தொழில்நுட்ப" என்ற பெயர்கள் நீக்கப்பட்டு "அண்ணா பல்கலைக்கழகம்" என அழைக்கப்படுகிறது.
இந்த கல்லூரி அரசு கல்லூரியாகும். அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. அவர்களது syllabusதான் அனைத்து கல்லூரிகளிலும் பின்பற்றப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம் தரமணி, அண்ணா பல்கலைக்கழகம் மண்டல அலுவலகம் திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் மண்டல அலுவலகம் நெல்லை, அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மண்டல அலுவலகம் மதுரை, அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மண்டல அலுவலகம் கோயமுத்தூர் என நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளது.
கிண்டி சென்னை பல்கலைக்கழகம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் படிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மாணவரின் கனவாக விளங்குகிறது.
இந்த கல்லூரியில் சாதாரணமாக சேர்ந்து விட முடியாது. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் (P/2+C/2+M) ஆகியவற்றில் 200-க்கு 195-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இது ஒவ்வொரு ஜாதி பிரிவின்படி மாறுபடும். இந்த பல்கலைக்கழகத்தில் சேர கவுன்சலிங் நடத்தப்படும். அதன்படி அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை முதல் கட்டத்திலேயே அழைத்து கவுன்சலிங் நடத்தி எந்த கோர்ஸ் வேண்டுமோ அந்த கோர்ஸ் இருந்தால் கொடுத்துவிடுவார்கள்.
ஆனால் மதிப்பெண்கள் முக்கியம். அப்படி மதிப்பெண் இல்லாவிட்டால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கு ரூ 50 ஆயிரத்தை விட குறைந்த கட்டணத்தில் சேர்ந்து பயிலலாம். மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் முன்னாள் ராணுவத்தினரின் மகள், மகன், விளையாட்டு பிரிவுகளில் தேசிய அளவில் சிறந்து விளங்கியவர்களுக்கு தனி இடஒதுக்கீடும் உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications