செல்வாக்கான ஞானசேகரனை ரிலீஸ் செய்துவிட்டு மீண்டும் கைது செய்த போலீஸ்! ஹைகோர்ட்டில் பாஜக வாதம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் விடுவிக்கப்பட்டு பின்னர் அழுத்தம் அதிகரித்ததை அடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த அளவுக்கு அவர் செல்வாக்கான நபர் என்றும் மனுதாரர் தரப்பு வாதம் வைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 37 வயதாகும் ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்தனர். இந்த நபர் பிரியாணி கடை நடத்தி வருகிறாராம்.
இவர் பிரியாணி கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு நேரத்தில் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சுவர் ஏறி குதித்து சென்ற போது அங்கு பாதிக்கப்பட்ட மாணவி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ஞான சேகரன் அதை வீடியோவாக எடுத்து பிறகு அவரிடம் சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினாராம்.

மறுத்த அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என கூறி வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வு முன்பு 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் , இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்க தலைமை நீதிபதியின் அனுமதி தேவை. அவர் தற்போது வெளியூரில் இருப்பதால் இந்த வழக்கை இப்போது சுயோமோட்டாவாக நடத்த முடியாது.
மனுதாரர் ரிட் வழக்காக தாக்கல் செய்தால் மாலை விசாரிப்போம் என உயர்நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கை ரிட் மனுவாக பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் தாக்கல் செய்தார்.இது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, தனது வாதங்களை முன் வைத்து வருகிறார். அதில் "முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர், இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
காவல் துறை இணையதளத்தில் வெளியிட்டது சட்ட விரோதமானது.
பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது.
இப்போது பாதிக்கப்பட்ட மாணவி யார், அவரது பெற்றோர் யார்? மொபைல் எண் என அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன.
ஓய்வு பெற்ற பெண் நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். ஞானசேகரை முதலில் கைது செய்த போலீஸார் விடுவித்து பின் அழுத்தம் அதிகமானதால் மீண்டும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் செல்வாக்கான நபர்" என மனுதாரர் வாதத்தில் முன்வைத்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications