பெண்களுக்கும் ஆபத்து.. கோவில் சொத்துகளுக்கும் ஆபத்து! கோவில் நிலத்தில் வீட்டை கட்டிய ஞானசேகரன்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் ஞானசேகரன் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக வருவாய்த் துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் திமுக ஆட்சியில் இந்து பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, இந்து கோவில் நிலத்துக்கும் பாதுகாப்பில்லை என விமர்சித்திருக்கிறார் தமிழக பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரு காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே மாணவியின் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது பலத்த அதிக வலைகளை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக் கழகம்:
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதிதுள்ளன. இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே ஞானசேகரன் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
எஸ்ஐடி விசாரணை:
இந்த நிலையில் அண்ணா நகர் துணை கமிஷனர் சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஜெய மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன் தினம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யார் அந்த சார் என்பது குறித்து மாணவி பேசியதாகவும், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே கோட்டூர்புரத்தில் ஞானசேகரன் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல்வேறு ஆவணங்கள், லேப்டாப், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு:
இதற்கிடையே ஞானசேகரனின் வீடு தொடர்பாக ஆவணங்களை வழங்க வேண்டும் என மாநகராட்சி பத்திரப்பதிவு துறை வருவாய்த் துறையினர் உள்ளிட்டோருக்கு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மேலும் ஞானசேகரன் கோட்டூர்புரத்தில் 2020ஆம் ஆண்டிலிருந்து வசித்து வரும் நிலையில் அந்த வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நிலத்தை ஆக்கிரமித்து வீடு:
இந்த நிலையில் கிண்டி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், கோட்டூர் ஏரிக்கரை தெருவில் இருக்கும் ஞானசேகரனின் வீட்டை அளவீடு செய்து பட்டா உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அந்த ஆவணங்களை சரிபார்த்த போது கோவில் நிலத்தை ஆக்கிரமித்து ஞானசேகரன் தனது வீட்டை கட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த நிலம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் எனவும், வீட்டுக்கு பட்டா இல்லை என்பதோடு அந்த இடத்தை வாங்க விற்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு இருப்பதும், அதனை ஆக்கிரமித்து ஞானசேகரன் வீடு கட்டி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
எச்.ராஜா விமர்சனம்:
இந்த நிலையில் இந்த செய்தியை பகிர்ந்திருக்கும் பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா," திமுக நிர்வாகிகள் பெண்களுக்கும் ஆபத்து.. இந்து கோவில் சொத்துக்களுக்கும் ஆபத்து" என பகிர்ந்து இருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications