மாணவியை சீண்டிய ஞானசேகரன்.. அமைச்சர் மா.சு.வுக்கு இவ்வளவு நெருக்கமா? ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் தான் எனவும், சமீபத்தில் கூட அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை நகரின் மையப் பகுதியான கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவர் அதே கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மறைவான இடத்தில் அந்த மாணவியும் அவரது காதலனும் பேசிக் கொண்டிருந்தனர்.
அண்ணா பல்கலை வன்கொடுமை:
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மாணவனை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஞானசேகரன்:
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவியை மிரட்டி அத்துமீறிய ஞானசேகரன் திமுக நிர்வாகி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உள்ளிட்ட பலருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் சர்ச்சை எழுந்தது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான் என தொடர்ந்து கூறி வருகிறார்.

அண்ணாமலை புகார்:
முதலில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுருந்த ட்விட்டர் பதிவில்,"கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டவர். திமுக நிர்வாகி, தமிழக மக்கள் இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?. மு.க. ஸ்டாலின் எப்போதாவது பொறுப்பேற்பாரா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
திமுக மறுப்பு:
அதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் திமுக நிர்வாகி என்பது உண்மை அல்ல எனவும், எது நடந்தாலும் திமுகவை குறை கூறுவது அண்ணாமலையின் இயல்பான குணம். அண்ணாமலை கூறுவதால் அது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்று அர்த்தமல்ல, அது உண்மையும் அல்ல என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்தார்.
மா.சுப்பிரமணியனுக்கு நெருக்கம்:
இந்நிலையில், ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் தான் எனவும், சமீபத்தில் கூட அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை?
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன்:
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு? திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா? " என கூறியுள்ளார்.
-
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications