அண்ணா பல்கலையில் அலறிய மாணவி! போலீஸ் எஃப்ஐஆர் லீக் ஆனது எப்படி? மூடி மறைக்கும் போலீஸ்? பகீர் புகார்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், எஃப்.ஐ.ஆர் லீக் விவகாரத்தில் காவல்துறை தவறை மறைக்க முயல்கிறது எனவும், இதற்கு பொறுப்பேற்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட, குற்றத்தை தடுக்க தவறிய அனைவரும் பதவி விலக வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (FIR) லீக் ஆனது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த விவகாரத்தில், சென்னை மாநகர காவல்துறையின் விளக்கமானது காவல்துறையின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் உள்ளது.
எஃப்ஐஆர் லீக்:
குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, முதல் தகவல் அறிக்கை லாக் ஆவதில் தாமதமானதாகவும், அந்த தாமதமான நேரத்தில் ஒரு சிலர் பார்த்து, பதிவிறக்கம் செய்திருப்பதாகவும், அல்லது புகார்தாரர்கள், குற்றவாளி தரப்புக்கு அளிக்கப்பட்ட நகல் மூலமாகவும் லீக் ஆகியிருக்கலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை:
சென்னை மாநகர காவல்துறையின் இந்த பதில், காவல்துறையின் முழு பொறுப்பைத் தட்டிக்கழிப்பதோடு மட்டுமல்லாமல், முதல் தகவல் அறிக்கை லீக் ஆன விவகாரத்தில் காவல்துறையில் நிகழ்ந்த தவற்றை மிக எளிதாக கடந்து செல்ல முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு, அந்த விவரங்களுடன் விளக்கமளித்திருக்க வேண்டும்.
அவசர அறிக்கை:
ஆனால், அதை விடுத்து தொழில்நுட்ப கோளாறு, யாரோ பதிவிறக்கம் செய்திருக்கலாம், ஏதோ ஒரு வழியில் லீக் ஆகியிருக்கலாம், வெளியிலிருந்துதான் கசிந்திருக்கிறது, அதனால் காவல்துறைக்கு இதில் தொடர்பில்லை என தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில், அவசர அறிக்கை வெளியிட்டு தவறை மறைக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது.
சார் யார்?:
அதேபோல் இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் கூறப்படும் 'சார்’ என்று கூறப்பட்ட இன்னொரு நபர் குறித்து விவாதம் எழுந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என முழு விசாரணையும் நிறைவு பெறுவதற்கு முன்பே காவல்துறை விளக்கமளித்துள்ளது. அடுத்தடுத்த விசாரணையின் மூலம் தொடர்புடையவர்களை கண்டறிய வேண்டிய கடமையில் காவல்துறை உள்ள நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என ஏன் விளக்கமளிக்க வேண்டும்.
சென்னை மாநகர காவல்துறை:
மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல்துறையின் விளக்கமும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களின் கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் கமிட்டியில் (POSH) உள்ள பேராசிரியருடன் வந்து புகார் அளித்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. அதேசமயம், மாணவி காவல்துறையில் புகார் அளித்த பின்னர் தான் பல்கலைக் கழகத்திற்கு தகவல் தரப்பட்டதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இந்த முரண்பட்ட கருத்துக்கள் இந்த வழக்கு விசாரணையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
சிசிடிவி கேமராக்கள்:
அதேபோல் குற்றச் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. தமிழகத்தில் எழுதப்படாத விதியாக குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் ஏன் வேலை செய்வதில்லை என்கிற கேள்வி எழுகின்றது.
அண்ணா பல்கலைக்கழகம்:
இதற்கு முன்பும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு (POSH) செயல்பாட்டில் உள்ளதா என்கிற கேள்வி எழுகின்றது. நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக் கழகம் என பெயர் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி இருப்பது மிகுந்த கவலையளிக்கின்றது.
பதவி விலக வேண்டும்:
மாணவிகளின் பாதுகாப்பில் பல்கலைக் கழக நிர்வாகம், காவல்துறை உரிய அக்கறை செலுத்தவில்லை என்பதும், தற்போது நடைபெற்ற மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதனை மறைக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகிறது என்பதும் தெளிவாகின்றது. ஆகவே, இதற்கு பொறுப்பேற்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட, குற்றத்தை தடுக்க தவறிய அனைவரும் பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications