ஃபீஸ் இவ்வளவா? தேர்வு கட்டண உயர்வால் அதிர்ந்த என்ஜினியரிங் மாணவர்கள்.. உடனடியாக பின்வாங்கிய அரசு!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை 50% வரை உயர்த்தி அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகத்தால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் இரண்டு சுற்றுகளின் முடிவில், 39.39 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளது. 69,147 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்று முடிவில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. 40 கல்லூரிகளில் 90% இடங்களும், 29 கல்லூரிகளில் 75% இடங்களும் நிரம்பிவிட்டன.
2வது சுற்று முடிவில், 197 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான இடங்களும், 58 கல்லூரிகளில் 1%க்கும் குறைவான இடங்களும் நிரம்பியுள்ளன, 30 கல்லூரிகளில் எந்த இடமும் நிரப்பப்படவில்லை. மாணவர்கள் பெரும்பாலும் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிகம் தேர்வு செய்துள்ளனர்.
செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு: இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டு உள்ளது. தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ஒரு பாடத்திற்கு ரூபாய் 150ல் இருந்து ரூபாய் 225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை புராஜெக்ட் ஒர்க் கட்டணம் ரூ. 300ல் இருந்து 450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டங்களுக்கு ஒரு பாடத்திற்கு தேர்வு கட்டணம் 450ல் இருந்து ரூ. 670 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ. 1000ல் இருந்து ரூபாய் 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சான்றிதழ்களை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்வதற்கான கட்டணமும் ரூ.1000 லிருந்து ரூ. 1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ் கட்டண உயர்வு: அதேபோல, தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ. 1000ல் இருந்து ரூபாய் 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணங்கள் அனைத்தும் இனிமே ஆண்டுதோறும் 5% அளவுக்கு உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தி வைப்பு: இந்நிலையில், இந்த கட்டண உயர்வுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது. இதனால், ஒவ்வொரு செமஸ்டருக்கும் சில ஆயிரங்கள் அதிக பணம் செலுத்த வேண்டி இருப்பதால் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது என்றும், தேர்வுக் கட்டணத்தில் இப்போது உள்ள நடைமுறையே தொடரும் என்றும், இந்த ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டும் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications