சபாஷ்.! ஆசிய அளவில் டாப் இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.. வியந்து பார்க்கும் மற்ற நாடுகள்
டெல்லி: ஆசிய அளவில் டாப் பல்கலைக்கழகங்கள் குறித்து வெளியிடப்பட்ட தரவரிசையில் ஆராய்ச்சி குறித்த லிஸ்டில் தமிழ்நாட்டில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் டாப் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த சில காலமாகவே கல்வித் துறையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக உயர் கல்வித் துறையை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளை முடித்துக் கொண்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் வெளியிடப்படும் ரேங்கிங்கிலும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் டாப் இடங்களைப் பிடித்து வருகிறது.
ரேங்கிங்: இதற்கிடையே உலக நாடுகள் ஆசிய அளவில் இருக்கும் சிறந்த பல்கலைக்கழகங்களைத் தொகுத்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. QS பல்கலைக்கழக தரவரிசை என்ற இந்தப் பட்டியலில் உலக நாடுகளை இந்தியா திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பொதுவாக ஆசிய அளவில் வெளியிடப்படும் இந்த ரேங்கில் சீன பல்கலைக்கழகங்கள் தான் டாப் இடத்தில் இருக்கும். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
இந்த ரேங்கிங்கில் முதல்முறையாகச் சீனாவை இந்தியா ஓவர்டேக் செய்துள்ளது. டாப் பல்கலைக்கழகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரேங்கில் இந்தியாவில் இருந்து மொத்தம் 148 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு கூடுதலாக 37 பல்கலைக்கழகங்கள் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளன. மறுபுறம் சீனாவில் இருந்து இந்த லிஸ்டில் 133 பல்கலைக்கழகங்களும், ஜப்பானில் இருந்து 96 பல்கலைக்கழகங்களும் இதில் இருக்கிறது.
இந்த லிஸ்டில் சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் முதல் இடத்தில் இருக்கிறது. ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்: அதேநேரம் இதில் பல முக்கிய பிரிவுகளில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் டாப் இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி உற்பத்தித்திறனில் முதல் இடத்தில் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் வெளியிடும் ஆய்விதழ்கள் மற்ற பல்கலைக்கழக பேராசிரியர்கள் வெளியிடும் ஆய்விதழ்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்களில் அதிகபட்ச ஆய்வுகள் நடந்துள்ளன.
Papers per Faculty என்ற பிரிவில் ஆசியாவின் 10 சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை டாப் இடங்களில் உள்ளன. மேலும், அதிகபட்ச முனைவர் பட்டங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்கள் லிஸ்டில் ரேங்கில் ஒன்பது இந்தியர்கள், இந்திய அறிவியல் கழகம் ஆசியாவின் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆராய்ச்சி: அதாவது ஆராய்ச்சி சார்ந்த பாடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் ஆசியப் பிராந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது நமது பல்கலைக்கழகங்கள் எந்தளவுக்குச் சிறந்த இடத்தில் இருக்கிறது என்பதையே காட்டுவதாக இருக்கிறது. மேலும், இந்த இந்திய பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேகமாக டாப் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்று என்பதையே காட்டுவதாக இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தான் டாப் இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாகவே மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பொறியியல் கலந்தாய்விலும் கூட முதலில் அண்ணா பல்கலைக்கழகம் நிரம்பும். இந்தச் சூழலில் ஆசிய அளவிலான ரேங்கிலும் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications