அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு.. மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் தேர்வு.. அமைச்சர் பொன்முடி
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வுக்கு மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆண்லைன் முறையிலேயே பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல தேர்வுகளும் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
ஆலோசைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் 4.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள், அதில் வெறும் 25%, அதாவது 1.10 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்தனர்.
இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளோம். ஆன்லைன் முறையில் 3 மணி நேரம் தேர்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாணவர்கள் தேர்வு கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.
ஏற்கனவே, பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களும் மதிப்பெண்களை அதிகப்படுத்த விரும்பினால் இந்தத் தேர்வை எழுதலாம். எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளனரோ, அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" என்றார்.
மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய முடியது என்றும் மாநில உரிமைகள் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications