காட்டுமிராண்டி தனமான குற்றம்.. ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக்கூடாது.. காவல்துறை வக்கீல் வாதம்
சென்னை: ஒரு பல்கலைக்கழக வளாகத்திற்கு நுழைந்து காட்டுமிராண்டி தனமான குற்றத்தை ஞானசேகரன் புரிந்துள்ளார். இது அரிதிலும் அரிதான வழக்கு. ஆகையால் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், அவருக்கு இரக்கம் காட்டக் கூடாது என்று காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வந்தன.

குற்றவாளி ஞானசேகரன்
பாதிக்கப்பட்ட மாணவி உட்பட மொத்தமாக 29 சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டன. அதேபோல் சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில் 100க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் என 100 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதன்பின் நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
கதறிய ஞானசேகரன்
இதனால் நீதிமன்றத்திலேயே கதறிய ஞானசேகரன், எனக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டுமே இருக்காங்க.. அவர்களுக்கும் உடல்நிலை சரியில்லை.. சகோதரி இருக்காங்க.. 8வது படிக்கும் மகளை பார்த்து கொள்ள வேண்டும்.. இதனால் தொழில் பாதிக்கும்.. வங்கி கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது.. கடன்கள் உள்ளன. அதனால் குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கதறினார்.
காட்டுமிராண்டித்தனமான குற்றம்
இதன்பின் குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். இதனிடையே காவல்துறை வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தரப்பில் குற்றவாளிக்கு இரக்கம் காட்டக் கூடாது என்று வாதம் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று காட்டுமிராண்டி தனமான குற்றத்தை புரிந்துள்ளார் ஞானசேகரன்.
இரக்கம் காட்டக் கூடாது
இதனால் அரிதினும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட 11 பிரிவுகளிலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications