மேடம்.. இது ஆக்சன் மேடம்.. வலிப்பு வந்தது போல் நடிப்பு! போலீசை ஆஸ்பத்திரிக்கு அலைய விட்ட ஞானசேகரன்.!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்ததாக ஆறு போலீசாரின் செல்போன்களை பறிமுதல் செய்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வலிப்பு வந்ததாக ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அது பொய்யானது என மருத்துவ பரிசோதனையும் தெரிய வந்துள்ளது. இதனை எடுத்து ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளனர் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த இளம் பெண் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பல்கலைக் கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

சென்னையில் பிரியாணி கடை நடத்தி வரும் கோட்டூர்புரைத்தைச் சேர்ந்த ஞானசேகரன் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் அத்துமீறி சென்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன. இதை அடுத்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனை அடுத்து சென்னை போலீஸ் இடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழக்கு மாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மாணவியின் வாக்குமூலம் அடங்கிய எஃப்ஐஆர் வெளியானது குறித்து இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கைதாகியுள்ள ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து ஞானசேகரனின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்களில் இருக்கும் பெண்கள் யார் என்பது குறித்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.
மேலும் ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் அடையாறு காவல் நிலையத்தை சேர்ந்த ஆறு போலீசார் அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. தற்போது அவர்களது செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன் தினம் அதிகாலை ஞானசேகருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .அப்போது ஞானசேகருக்கு வலிப்பு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதும் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதற்கிடையே போலீசாரின் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் தான் ஞானசேகரன் வலிப்பு வந்தது போல நடித்து போலீசாரை அலையவிட்டது தெரியவந்தது. இத்னையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், எஃப்ஐஆர் வெளியான விவகாரம் தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அபிராமிபுரம் காவல் நிலைய எழுத்தரான மருதுபாண்டியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications