Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை? ஞானசேகரனுக்கு நினைத்து பார்க்க முடியாத தண்டனை! நீதிபதி அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். கூடுதலாக 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

chennai anna university

இதில் 30 ஆண்டுகளுக்கு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு "தண்டனை விலக்கு இல்லை" என்று அர்த்தம். தண்டனை விதிக்கப்பட்ட நபர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்கு கண்டிப்பாக சிறையில் இருக்க வேண்டும், விடுதலை, பரோல் அல்லது தண்டனை விலக்கு மூலம் முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை.

நீதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி எந்தவொரு விடுதலையையும் வெளிப்படையாக நிராகரிக்கும் சட்ட பிரிவு ஆகும் இது. ஜனாதிபதி மன்னிப்பு (பிரிவு 72) அல்லது ஆளுநரின் கருணை (பிரிவு 161) தவிர, எந்த அதிகாரமும் (அரசாங்கம் அல்லது சிறை அதிகாரிகள் உட்பட) தண்டனையை குறைக்க முடியாது. நன்னடத்தை காரணமாக விடுதலை எல்லாம் செய்ய முடியாது. பரோலும் வழங்க கூடாது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். 11 குற்றச்சாட்டுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி பேட்டி அளித்துள்ளார்.

வழக்கின் தொடக்கத்தில் ஞானசேகரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அதன்பின் மீண்டும் 4 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டன. மொத்தமாக 12 பிரிவுகள் கீழ் வழக்கு போடப்பட்டது. பிப்.24 அன்று சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சட்ட விரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல்,

மிரட்டி நிர்வாணப்படுத்துதல்

தொழில்நுட்ப சட்டம்

ஆதாரங்களை அழித்தல்

கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல்

புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற குற்றங்களின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு. இதில்தான் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபணம் ஆகி உள்ளது. இதில்தான் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபணம் ஆகி உள்ளது. அதனுடைய தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 12 பிரிவுகளும் கடுமையான சென்சிடிவ் பிரிவுகள் ஆகும், இந்த பிரிவுகளை போலீசார் பதிவு செய்தது ஞானசேகரனுக்கு எதிராக திரும்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+