கேட்டது ஒரு சார்? ஆனால் சிக்கியது 6 சார்! ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த 6 போலீஸ்! ஓசி பிரியாணி வேற!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுடன் அடையாறு போலீசார் 6 பேருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த ஆறு போலீசாரின் செல்போன்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரு காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே மாணவியின் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது பலத்த அதிக வலைகளை ஏற்படுத்தியது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதிதுள்ளன. இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே ஞானசேகரன் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் ஞானசேகரனை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய எழும்பூர் காவல் நிலையத்தில் ஞானசேகரனிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் அண்ணா நகர் அசிஸ்டன்ட் கமிஷனர் அலுவலகத்திற்கு ஞானசேகரன் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு துணை ஆணையர் சிநேக பிரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது திடீரென ஞானசேகரனுக்கு அதிகாலையில் வலிப்பு ஏற்பட்டதாகவும் இதை அடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஞானசேகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஞானசேகருடன் அடையாறு போலீசார் 6 பேருக்கு தொடர்பு இருந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது.
அவர்கள் ஆறு பேரும் அடிக்கடி ஞானசேகர்னுடன் தொலைபேசியில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து ஞான சேகருடன் தொடர்பில் இருந்த ஆறு போலீசாரின் செல்போன்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் ஞானசேகரன் பிரியாணி கடை நடத்தி வந்த நிலையில் அவர்கள் அடிக்கடி அந்த கடைக்கு சென்று பணம் கொடுக்காமலேயே பிரியாணி வாங்கி சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது.
வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற போது 'சாரிடம் பேசு’ என அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் ஞானசேகரன் மிரட்டியதாக எஃப்ஐஆர்-ல் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் ’யார் அந்த சார்’ என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்த நிலையில் ஆறு போலீசார் ஞானசேகரன் தொடர்பில் இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications