முதல்வர் விஜய்யின் 3ஆவது செயலாளராக அண்ணாதுரை ஐஏஎஸ் நியமனம்! தமிழக அரசு உத்தரவு
சென்னை: முதல்வர் விஜய்யின் மூன்றாவது செயலாளராக அண்ணாதுரை ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் இணை செயலாளராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் முதல்வரின் தனிச் செயலாளர் 1, 2 ஆகிய இருபதவிகளுக்கான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டனர். தனிச் செயலாளர் 1 அல்லது முதன்மை செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டார். இவர் மருத்துவத் துறை செயலாளராக இருந்தவர்.

அது போல் முதல்வரின் தனிச் செயலாளர் 2-வாக ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதிதிராவிடநலத் துறை செயலாளராக இருந்தவர்.
பொதுவாக முதல்வருக்கு 1, 2, 3 என 3 தனிச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது இரு செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் செயலாளர் - 3 பிறகு நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
முதல்வராக ஸ்டாலின் இருந்த போது முதல்வரின் தனிச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு செயலாளர் -2 ஆக சண்முகமும், செயலாளர் - 3 ஆக அனு ஜார்ஜும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இதில் 2024 ஆம் ஆண்டு உதயசந்திரன் நிதித் துறைக்கு மாற்றப்பட்டதால் அவருக்கு பதிலாக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

முதலவரின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த 3 தனிச் செயலாளர்களுடன் ஒரு இணைச் செயலாளரும் நியமிக்கப்படுவார்.
அந்த வகையில் உமாநாத்திற்கு பதிலாக செந்தில் குமாரும், சண்முகத்திற்கு பதிலாக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் பதவியேற்றதில் இருந்து ஓராண்டுக்கு பதவியில் இருஇவர்களுக்கான துறைகள் பின்னர் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் இன்று ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் முதல்வரின் 3ஆவது செயலாளராக அண்ணாதுரையும் இணை செயலாளராக விஷ்ணுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அது போல் தமிழக அரசின் நிதி நிர்வாகத்திற்கு சித்திக் ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications